எடை குறைப்பில் சில உண்மைகள்
காலை உணவை தவிர்ப்பதால் எடை குறையுமா?
காலை உணவு அன்றைய நாளின் முக்கியமான தேவயாகும் காலை உணவை தவிர்ப்பவர்கள் ஆற்றல் தேவைக்காக அந்த நாள் முழுவதும் அதிகமாக சாப்பிடுவார்கள் .
பலரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்விக் மூலம் காலை உணவை தவிர்ப்பவர்களின் எடையும் இடுப்புச் சுற்றளவும் அதிகரித்து இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
எனவே ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பதற்கு அனைத்து சத்துக்களும் அடங்கிய காலை உணவு முக்கியமானது.
கொழுப்பை கரைக்கும் உணவுகள் எடையை குறைக்குமா?
அண்ணாச்சி பழம், இஞ்சி, வெங்காயம், மிளகாய், கிரீன் டீ மற்றும் பூண்டு போன்ற உணவுகள் உடலின் வளர் சிதை மாற்றத்தை விரைவுப்படுத்துகின்றன.
அதன் மூலம் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு கலோரிகளாக மாற்றப்பட்டு எரிக்கப்படும் .
இதன் மூலம் உடல் எடை குறைக்கப்படும்.
எடையை குறைப்பதற்காக சாப்பிடும் செயற்கை உணவுப் பொருட்கள் பலன் தருமா?
சத்துள்ள உணவு, முறையான உடற்பயிற்சி, தேவையான இரவு தூக்கம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை போன்றவற்றின் மூலம் மட்டுமே ஆரோக்கியமான வழியில் எடையை குறைக்க முடியும் .
பெரும்பாலும் சப்ளிமெண்டுகளில் உள்ள மூலப்பொருட்கள் பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை.
குறைந்த கொழுப்பு அளவுள்ள உணவை உண்டால் எடை குறைமா ?
கொழுப்பு அளவு கொண்ட இயற்கை உணவுகள் உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டவை.
கொழுப்பு குறைக்கப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் சர்க்கரை மற்றும் உப்பு எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும்.
நொறுக்கு தீனிகள் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்குமா?
எண்ணெய்,கொழுப்பு, உப்பு, சர்க்கரை அதிகம் சேர்த்து உணவுகள், பொரித்த மற்றும் வறுத்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சாப்பிடுவதன் மூலம் உடல் எடை அதிகரிக்கும்.
ஆரோக்கியமான நொறுக்கு தீனிகள் எடையை முறையாக பராமரிப்பதற்கு உதவும்.
கடலை உருண்டை, எள் உருண்டை, சுண்டல், காய்கறி மற்றும் பழங்கள் கலந்த சாலட், விதைகள், கொட்டைகள் போன்றவற்றை சாப்பிடலாம்.
விருந்து உணவுகளை தவிர்ப்பதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியுமா?
விருந்துகளில் பங்கேற்கும் போது அதிக அளவில் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகளை குறைந்த அளவில் சாப்பிடலாம்.
மொத்தமாக விருந்துகளை தவிர்க்கும் போது அந்த ஏமாற்றமே மனதில் அழுத்தத்தை ஏற்படுத்தி அன்றைய நாளில் அதிகமாக சாப்பிடுவதற்கு தூண்டி விடும்.