உயரமாக காட்டுவதற்கு சில டிப்ஸ்

உயரமாக காட்டுவதற்கு சில டிப்ஸ்
உயரம் குறைவாக இருக்கும் பெண்கள் ஆடைகள் அணியும் விதத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் தங்களை உயரமானவர்களாக காட்ட முடியும் .

கழுத்து கையளவு ஆங்கிலத்தில் வி மற்றும் யூ வடிவ கழுத்துப் பகுதி உள்ள உடைகள் உங்களை உயரமானவர்களாக காட்டும்.

 அகலமான கழுத்துக் கொண்டு ஆடைகள் அணிவதை தவிர்க்கலாம்.

 கழுத்துப் பகுதியில் எம்பிராய்டரி வேலைப்பாடு கொண்ட ஆடைகளை அணியலாம்.

 முக்கல் கையளவு முழு கையளவு ஆடைகள் உயரத்தை அதிகரித்து காட்டக்கூடியவை.

 துணிவகை கனமான மற்றும் அதிக வேலைப்பாடுகள் நிறைந்த துணி வகைகளை தவிர்த்து மெலிதான துணி வகைகளை அணியலாம்.

 வலித்துணி , ரேயான் போன்ற எடை குறைந்த துணி வகைகள் அணிவது நல்லது.


டிசைன், செங்குத்தான கோடுகள் கொண்ட ஆடைகளையோ அல்லது சிறு வேலைபாடு நிறைந்த ஆடைகளையோ அணியலாம்.

 கிடைமட்ட கோடுகள் மற்றும் பெரிய பூ வேலைப்பாடு கொண்ட ஆடைகளை அணியும்போது அவை மேலும் உயரத்தை குறைத்துக் காட்டும்.

 அனார்கலி வகை ஆடைகளை அணியும் போது இடுப்புக்கு மேற்பகுதி தனித்து காட்டும் படியான ஆடைகளை தேர்ந்தெடுக்கலாம்.

 இதற்கு துப்பட்டாவை ஒரு பக்கமாக அணியலாம்.

 நிறம் உங்கள் நிறத்துக்கு ஏற்றார் போல ஆடை அணிவது நல்லது.

 குர்தி அணியும் போது குர்தி மற்றும் கால் சட்டை ஒரே நிறத்திலும் துப்பட்டா வேறொரு நிறத்திலும் இருந்தால் நீங்கள் உயரமாக தெரிவீர்கள்.

 கால் சட்டை அளவு எந்த ஒரு ஆடைக்கும் கால் சட்டை மெலிதாக இருப்பது அவசியம் .

உயரும் குறைந்தவர்கள் பலா சோ போன்ற ஆடைகளை தவிர்க்கலாம்.

 முழு கால்சட்டைக்கு பதிலாக சிறிது உயரம் குறைந்த உடைகளை அணியலாம் .

அதிக வேலைப்பாடு வேண்டாம்.

 ஆடைகளில் அதிக வேலைப்பாடுகள் கொண்டதை தவிர்ப்பது நல்லது.

 சிறு சிறு வேலைபாடுகள் கொண்ட ஆடி வகைகள் உங்களை உயரமாகவும் அழகாகவும் காட்டும் சேலை அணிபவர் கவனத்திற்கு பெரிய பார்டர் கொண்ட சேலைகள் அணிவது தவிர்க்கவும்.

 மேலும் காட்டன் புடவைகளை தவிர்த்து மெல்லிய துணி வகைகளை உடுத்தலாம் .

ரவிக்கையும் சேலையின் நிறத்திலேயே அணிந்தால் சற்றே உயரமாக தெரிவீர்கள்.

 ஜீன்ஸ் அணிபவர் கவனத்திற்கு ,

ஜீன்ஸ் அணிபவர்கள் மேல் சட்டையை உள்ளே சொருகி கொள்வதன் மூலம் உயரமாக தெரியக்கூடும்.

 காலணிகள் பெரும்பாலும் உயரம் குறைந்தவர்கள் விரும்புவது ஹை ஹீல்தான் அவை ஏற்படுத்தும் பக்க விளைவுகள் அதிகம் எனவே கூடுமானவரை தவிர்க்கலாம்.

 ஆடையின் நிறத்திற்கு ஏற்றார் போல சற்று உயரம் குறைந்த ஹில்ஸ் அணியும் போது நீங்கள் உயரமாகவும் கம்பீரமாகவும் தெரிவீர்கள்.
 முடி அலங்காரம் உயரும் குறைந்தவர்களுக்கு பஃப் ஹேர் ஸ்டைல் பொருத்தமாக இருக்கும் அவர்களை உயரமாகவும் காட்டும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை