குழந்தைகளின் அறிவாற்றலை மேம்படுத்தும் பயிற்சிகள்

குழந்தைகளின் அறிவாற்றலை மேம்படுத்தும் பயிற்சிகள்

கேள்வி கேட்பதற்கு ஊக்குவித்தல்

 குழந்தைகளின் அறிவுத்திறனை மேம்படுத்துவதில் முக்கியமான ஒன்று அவர்களின் கேள்வி கேட்கும் திறனை ஊக்குவிப்பது.

 கேள்வி கேட்கும் முன் அது சார்ந்த விஷயத்தில் தெளிவு இருக்க வேண்டும் என சொல்லிக் கொடுங்கள்.

 பாடமாக இருந்தால் அந்தப் பாடத்தை முதலில் ஆழ்ந்து படித்து அதிலும் சந்தேகங்களை கேள்வியாக கேட்க வேண்டும்.

 இந்த பயிற்சியால் சிக்கலான விஷயங்களில் சிந்திப்பது அதற்கு தீர்வு காண முடிவுகள் எடுப்பது குறித்த திறன் இளம் வயதிலேயே மேம்படும்.

 செயல்வழி கற்றல் 

குழந்தைகளை ஒரே இடத்தில் அமர வைத்து கற்றுத்தரும் கல்வியால் அவர்களுக்கு வெறுப்புணர்வு ஏற்படுமே தவிர நினைவாற்றல் மேம்படாது.

 எனவே எந்த விஷயத்தையும் குழந்தைகளின் விளையாட்டுடனே கற்றுத் தர முயற்சிக்க வேண்டும்.

 அவர்களின் நினைவாற்றலை மேம்படுத்தும் வகையில் ஒரு தலைப்பை கொடுத்து அதில் குழந்தைகளின் கருத்துக்களை கேட்க வேண்டும்.

 இது பொதுவான தலைப்பாகவோ அல்லது பாடம் சார்ந்ததாகவோ இருக்கலாம்.

 அதில் நீங்கள் கேள்வி கேட்டு குழந்தைகளை பதிலளிக்க வைக்கலாம்.

 இதன் மூலம் குழந்தைகளின் நினைவாற்றல் மேம்படுவதுடன் எந்த பிரச்சினையாக இருந்தாலும் எளிதில் தீர்வு காணும் பக்குவமும் கிடைக்கும்.

 படமாக மாற்றுங்கள்

குழந்தைகளுக்கு ஒரு விஷயத்தை வரி வடிவத்தில் சொல்லிக் கொடுக்காமல் திரையில் தோன்றும் படமாக ஓட்டி பார்க்கும் வகையில் பயிற்சி அழியுங்கள்.

 இதன் வழியாக அவர்களால் நீங்கள் சொல்லும் விஷயத்தை எளிதில் மனதில் பதிய வைத்துக் கொள்ள முடியும்.

 பாடத்தில் உள்ள வரிகள், சூத்திரங்கள் என அனைத்தையும் எளிதில் நினைவு படுத்த முடியும்.

 உதாரணம் கொடுங்கள்

 நினைவாற்றலை மேம்படுத்துவதில் மற்றொரு பயிற்சி உதாரணம் மூலம் கற்றுக் கொடுத்தல்.

 பாடம் சார்ந்த விஷயங்களுக்கு உங்களின் சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை உதாரணமாக கூறுங்கள் .

இதை குழந்தைகளால் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள முடியும்.

 அறிவாற்றலும் மேம்படும். 

ஆசிரியராக மாற்றுங்கள் 

நீங்கள் குழந்தைகளுக்கு கற்றுத் தருவது போன்று குழந்தைகளையும் உங்களுக்கு ஆசிரியராக மாறி சில விஷயங்களை கற்றுத் தர வையுங்கள்.

 இதன் மூலம் குழந்தைகளின் கற்றல் திறன் மேம்படும் .

பிறருக்கு கற்பிக்கும் போது இயல்பாகவே அறிவாற்றலும் மேம்படும்.

 அறிவு வரைபடம் 

குழந்தைகளின் அறிவாற்றலை மேம்படுத்த வரைபடத்தை உருவாக்கி பயிற்சி அளிக்கலாம் .

இதனால் குழந்தைகளுக்கு ஒரு விஷயத்தை ஆழ்ந்து புரிந்து கொள்ளும் திறன் உருவாகும்.
 இதுவே பாடத்தை புரிந்து கொள்வதிலும் செயல்பட வைக்கலாம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை