பக்குவமான பப்பாளி

பப்பாளியின் மருத்துவ பயன்கள்
 பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டால் வயிற்றில் உள்ள நாக்குப்பூச்சிகள் அழிந்து போகும்.

 பப்பாளி இலைகளை அரைத்து உடல் மீது ஏற்படும் கட்டிகள் மீது மேல் பூச்சாக பூசினால் கட்டி உடைந்து சரியாகும்.

 பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து கை, கால் உள்ளிட்ட இடங்களிலும் உடல் வீக்கங்கள் இருந்தால் அதன் மேலும் பூசி வர வீக்கம் குறையும்.

 பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டியை இடத்தில் பூசினால் விஷம் முறியும். வலி குறையும்.

 பப்பாளி காய் குழம்பை பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் அவர்களுக்கு தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

 பப்பாளி பழத்தை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்து வந்தால் உடல் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
 எலும்பு வளர்ச்சி அடையும்.
 பற்கள் உறுதியாகும்.

 பப்பாளிக்காயை அடிக்கடி சமையலில் கூட்டு பொரியல் என சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் ஆரோக்கியமாக குறையும் .பிறகு உடல் மெலிந்து அழகாக தோற்றம் அளிக்கலாம்.

 பப்பாளி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குறையும் வாய்ப்பு உள்ளது .

பப்பாளி பழத்தை தேனில் கலந்து உண்டு வந்தால் நரம்பு தளர்ச்சி நோய் விரைவில் குணமாகும்.

 நன்கு பழுத்த பப்பாளி பழத்தை கூலாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி முகம் பொலிவு பெறும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை