மரண தத்துவம்

மரண தத்துவம்
ஆடு, மாடு, கோழி, மீன் லாம் செத்தா அதோட பிணத்தை எவ்வளவு காசு கொடுத்தும் வாங்க ஆட்கள் இருக்கு.

ஆனால் ,

நீ செத்தா சும்மா கொடுத்தாக் கூட எவனும் உன் பிணத்தை வாங்கமாட்டான்.

நீ ஆசையா கட்டிய சொந்த வீட்டிலேயே அதிகபட்சம் 24 மணிநேரம் தான் உன்னோட பிணம் கிடக்கும்.

நீ வாங்கிய Bathroom cleaner கூட வீட்டுக்குள்ள இருக்கும் ஆனா உன்னோட பிணம் வெளிய கிடக்கும்.

நீ தொட்டு தாளிகட்டிய மனைவியும் உன் பிணத்தை தொட சங்கடபடுவா.
விதிவிலக்கு தாய்.

இப்படி யாருமே விரும்பாத உடலை வெச்சிக்கிட்டு என்னவெல்லாம் ஆட்டம் போடுகிறோம்?

நான் யார் தெரியுமா?
நான் அப்படி, நான் இப்படி என்று சுயதம்பட்டம் அளப்பரைகள்.

விதவிதமான ஆடைகள்
1000, 2000, 25000த்தில் 1,00,000த்தில் 10 லட்சம் மதிபுள்ள ஆடைபோட்ட உடல் என்பதர்க்காக புதைக்காமலோ எரிக்காமலோ விட்டுவிடுவார்களா என்ன?

விதவிதமான உணவுகள்
3 Star 5 Star 7 Star Hotel ல் சாப்பிட்டு வளர்ந்த உடலடா என்றால் மட்டும் வீட்டில் வைத்து பூட்டிக்கொள்வார்களா என்ன?

உலக அழகியே ஆனாலும் அந்த உடலைவிட்டு உயிர் போய்விட்டால் அது பிணமென்று தான் கூறுவார்கள். அதிபட்சம் 24 மணிநேரத்தில் சொந்தவீட்டிலிருந்து வெளியே கிடத்திவிடுவார்கள்.

பெரிய பெரிய பிரபலங்கள் பயன் படுத்திய ஆடை உபகரணங்களை போட்டி போட்டு வாங்க ஆட்கள் உண்டு.

ஆனால்,

அந்த பிரபலங்களின் பிணத்தை வாங்க எவர் உண்டு.
இதைத்தான் பாம்பாட்டிச் சித்தர் இவ்வுடலானது அரைக்காசுக்கு ஆகாதென்று ஆடு பாம்பே என்று பாடுகிறார்......

கருத்துரையிடுக

புதியது பழையவை