வெந்தயத்தின் மருத்துவம்
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி குறைய ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை 100 மில்லி மோருடன் கலந்து உட்கொள்ளலாம்.
கீரையில் சாறு பிழிந்து, தேன் கலந்து அருந்தினால் இரவில் நல்ல தூக்கம் வரும்.
வெந்தயத்துடன் பருப்பு, மிளகு, சீரகம் சேர்த்து குழம்பாக செய்துள்ள அஜீரணம் குணமடையும்.
வெந்தயத்தை பொரியல் கூட்டு துவையல் செய்து உள்ள பித்தம் நீங்கி உடல் குளிர்ச்சி அடையும்.
ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக ரத்தப்போக்கு உடைய பெண்கள் வெந்தயம், உளுந்து, ராகி சேர்த்து வெந்தயக்களி செய்துண்டால் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.
இது கர்ப்பப்பையை பலப்படுத்தும்.
வெந்தயத்தில் ஈஸ்ட்ரோஜன் இருப்பதால் இது பெண்களுக்கு மிகவும் ஏற்ற உணவு.
வெந்தய கீரையை வேக வைத்து தேன் விட்டு கடைந்து உண்ண இருமல், மார்பு வலி ,மூலம் குணமாகும்.
வெந்தயம் 15 கிராம், பச்சரிசி 300 கிராம் சேர்த்து சமைத்து சாப்பிட ரத்தப் பெருகும்.
வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து திராட்சையுடன் சேர்த்து உண்ண மலச்சிக்கல் நீங்க தீரும்.
வெந்தயம் ,கொள்ளு இரண்டையும் சம அளவு எடுத்து வேகவைத்து தினமும் உண்ண உடலிலுள்ள அதிகப்படியாக கொழுப்புச் சத்து குறைந்து எடை குறையும் .
வெந்தயத்தை வறுத்து பொடித்து கருவேப்பிலை சேர்த்து மோரில் கலந்து குடிக்க பேதி குணமாகும் .
வெந்தயம், கருவேப்பிலை இரண்டையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடித்து வைத்துக்கொண்டு தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் வீதம் உட்கொள்ள நீரழிவு நோய் மட்டுப்படும்.
இதில் உள்ள அமினோ அமிலம் இன்சுலின் உற்பத்தியை தூண்டிவிடும்.
வெந்தயத்தை ஊற வைத்த தண்ணீரில் முகம் கழுவிக் கொண்டால் கரும்புள்ளிகள் பருக்கள் சுருக்கங்கள் போய்விடும்.
அரை கிலோ வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி துணியில் கட்டி வைத்து அவ்வப்போது நீர் தெளித்து வரவேண்டும்.
மறுநாள் சிறிது நேரம் வெயிலில் கனமான துணியால் மூடி வைத்து பிறகு நிழலில் இரண்டு மணி நேரம் காய வைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்து சலித்து ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்துக்கொண்டு தினமும் காலையில் வெறும் வயிற்றில் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும். இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும்.