பயன்மிகு பனங்கற்கண்டு

பனங்கற்கண்டு
பனங்கற்கண்டில் அதிக அளவு வைட்டமின்கள்,தாது உப்புக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன.

 சளி,இருமல் மற்றும் தொண்டை கரகரப்பால் அவதிப்படுகிறீர்களா? சிறிதளவு பனங்கற்கண்டு வாயில் போட்டு அந்த உமிழ் நீரை விழுங்கினால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

 சிறிதளவு சீரகம் மற்றும் பனங்கற்கண்டு வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

 பசுமாட்டு நெய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு பனங்கற்கண்டு மற்றும் வேர்க்கடலை சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீங்கும். எப்போதும் நீங்கள் சுறுசுறுப்புடன் வலம் வரலாம்.

 நான்கு பாதாம் பருப்பு தலா ஒரு டேபிள்ஸ்பூன் பனங்கற்கண்டு மிளகுத்தூள் ஆகியவற்றை பொடி செய்து அதை பாலுடன் கலந்து குடித்தால் தீராத சளி பிரச்சினையும் உடனே சரியாகும்.

 தொண்டையில் வலி இருந்தால் தலா ஒரு டேபிள்ஸ்பூன் பனங்கற்கண்டு மிளகுத்தூள் நெய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் தொண்டை வலி ஓடிப் போகும்.

தினமும் இரவு தூங்குவதற்கு முன்பாக சிறிதளவு பனங்கற்கண்டு, சீரகம், பாதாம் ஆகிய மூன்றையும் ஒன்றாக சேர்த்து சாப்பிட்டு வரலாம் இதனால் நினைவாற்றல் பெருகுவதோடு கண் பார்வையும் கூர்மையாகும்.

 பனங்கற்கண்டு, பாதாம், மிளகுத்தூளை சேர்த்து வாரத்திற்கு மூன்று முறை சாப்பிட்டு வாருங்கள் இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் நோய்களின் தாக்கமும் தடுக்கப்படும்.
சிறுநீரக கற்கள் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? மூன்று டேபிள்ஸ்பூன் வெங்காயச் சாறுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து வாரத்திற்கு இருமுறை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரையும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை