கைகளில் வரைந்த மெகந்தியை நீக்கும் டிப்ஸ்
பெண்கள் கைகளிலும் கால்களிலும் மருந்தாணி வைத்துக் கொள்வது பல காலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது.
மருதாணி இலைகளுடன் மேலும் சில இயற்கையான பொருள்களை சேர்த்து பக்குவமாக அரைத்து கைகளில் வைத்துக் கொள்வதற்கு தற்பொழுது பலருக்கும் நேரமில்லை.
அதனால் பெரும்பாலானவர்கள் மருந்தாணி கோன்களை நாடுகிறார்கள்.
இதன் மூலம் வரையப்படும் மெஹந்தி டிசைன்கள் கண்களை கவரக்கூடியதாக இருக்கும். அதே சமயம் ஒன்று இரண்டு நாட்களிலேயே நிறம் திட்டு திட்டாக மங்க தொடங்கும்.
அதை சீக்கிரமே முழுவதுமாக நீக்குவதற்கு பலரும் விரும்புவார்கள் அதற்கான குறிப்புகளை இங்கே காண்போம்:
ஆன்டி பாக்டீரியல் தன்மை கொண்ட சோப்புகள் இறந்து செல்களை நீக்கும் ஆற்றல் கொண்டவை. இவை கைகளில் படிந்துள்ள நிறங்களை விரைவாக மறைய செய்யும். எனவே அடிக்கடி கைகளை ஆன்டி பாக்டீரியல் சோப் கொண்டு கழுவும்.
பின்பு கைகளில் சிறிது தேங்காய் எண்ணெயை தடவவும்.
உப்பு சிறந்த சுத்தப்படுத்தியாகும்.
இது கைகளில் படிந்துள்ள நிறங்களை எளிதாக நீக்கும். ஒரு கிண்ணத்தில் உப்பு கலந்த தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள் கைகளை அதில் மூழ்க வையுங்கள். 20 நிமிடம் கழித்து வெளியே எடுத்து பருத்தித் துணியால் ஈரத்தை ஒட்டி எடுங்கள்.
இவ்வாறு தினமும் ஒரு வேலை செய்து வந்தால் மருந்தாணி விரைவாக நீங்கும்.
முகத்துக்கு உபயோகிக்கும் ஸ்கிரப்பர் கிரீமை கைகளில் பூசி மென்மையாக ஸ்கிரப் செய்யுங்கள்.
இதனால் கைகளில் வரைந்து உள்ள மெஹந்தி முழுவதுமாக நீங்கவில்லை என்றாலும் அதன் நிறம் நன்றாக மங்கி இருக்கும்.
வெதுவெதுப்பான தண்ணீர் மருந்தானியின் மூலக்கூறுகளை தளர்ச்சி அடைய செய்யும்.
எனவே கைகளை லேசான சூடுள்ள தண்ணீரில் சிறிது நேரம் வைத்திருந்து மென்மையாக ஸ்கிரப் செய்யுங்கள்.
மருந்தாணி கரைகளை அகற்றுவதில் ஆலிவ் எண்ணெய் சிறப்பாக செயல்படும்.
ஆலிவ் எண்ணெயுடன் சிறிது உப்பை கலக்கவும்.
இந்த எண்ணையில் பஞ்சை தொட்டு கைகளில் மென்மையாக தடவவும்.
இதை பத்து நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.
பின்பு சோப்பு போட்டு கைகளை கழுவவும்.
இவ்வாறு ஒரு நாளில் பலமுறை செய்தால் மெஹந்தி விரைவாக நீங்கும்.
எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் மெஹந்தியை விரைவாக நீக்கக்கூடியது.
எலுமிச்சை சாற்றை நேரடியாக கைகளில் தடவலாம் அல்லது எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரில் கைகளை சிறிது நேரம் மூழ்கி இருக்கச் செய்யலாம்.
பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை இரண்டும் பிளீச் செய்யும் தன்மை கொண்டவை.
இவை இரண்டையும் பசை போல கலந்து கைகளில் மெஹந்தி வரைந்து உள்ள இடங்களில் பூசவும்.
10 நிமிடம் கழித்து ஸ்கிரப்பர் கொண்டு மெஹந்தி பட்ட இடத்தில் மென்மையாக ஸ்கிரப் செய்யவும். பின்னர் இளஞ்சூடான நீரில் கைகளை கழுவவும் நகங்களில் படிந்துள்ள மெஹந்தியை வெயில் பாலிஷ் ரிமூவர் கொண்டு எளிதாக அகற்றலாம்.