கல்யாண முருங்கை
முள் முருங்கை, கல்யாண முருக்கன், முள் முறுக்கு, என பல பெயர்களில் அழைக்கப்படும் கல்யாண முருங்கைக்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் உண்டு.
இதன் இலை, விதை, பூ, பட்டை போன்ற அனைத்தும் மருத்துவ பயன்கள் கொண்டவை.
இது கார சுவையும், வெப்பத்தன்மையும் உடையது.
அகலமான பச்சை நிற இலைகளையும், வெளிர் சிவப்பு நிற பூக்களையும் கொண்டது சுமார் 60 அடியில் இருந்து 80 அடி வரை வளரும்.
ஜூலை முதல் நவம்பர் மாதத்திற்குள் பூக்கள் பூக்கும் இலைகளை அரைத்து கிடைக்கும் சாற்றை தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன்பு பருகி வந்தால் கருத்தரித்தல் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.
பெண்களின் கருப்பையில் உண்டாகும் அனைத்து கோளாறுகளுக்கும் கல்யாண முருங்கை சிறந்த தீர்வாகும்.
எனவே தான் இதை பெண்களுக்கான மரம் என குறிப்பிடுகிறார்கள்.
அந்த காலத்தில் கன்னிப் பெண்கள் இருக்கும் வீடுகளில் கல்யாண முருங்கை மரத்தை வளர்ப்பது வழக்கமாகவே இருந்திருக்கிறது.
இதை உணவாகவும், சிற்றுண்டியாகவும் தயார் செய்து சாப்பிடலாம்.
கல்யாண முருங்கை இலையை வெங்காயம், தேங்காய், நெய் சேர்த்து வதக்கி சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும் .
இலையை அரைத்து உடலில் பூசி உலர்ந்த பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் சரும நோய்கள் நீங்கும்.
உடல் பருமன் குறைவதற்கு இதன் இலை சாறு உதவும்.
மாதவிடாய் வலி, ஒழுங்கற்ற மாதவிடாய், உதிரப்போக்குப் பிரச்சனை, கருப்பைக்கட்டி குழந்தை பேரின்மை போன்ற பிரச்சனைகளுக்கு கல்யாண முருங்கை சிறந்த தீர்வாகும்.
வயிற்றில் இருக்கும் பூச்சிகளை வெளியேற்றுவதற்கு கல்யாண முருங்கை இலையை அரைத்து மாதம் ஒரு முறை மருந்தாக சிறுவர்களுக்கு கொடுக்கலாம்.
அடையாகவும், சூப் தயார் செய்தும் மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடலாம்.
கீரை வடை போன்று கல்யாண முருங்கை இலையையும் வடையில் சேர்த்து தயாரிக்கலாம்.
பிரசவத்திற்கு பின்பு கருப்பையை தூய்மைப்படுத்தும், வலுப்படுத்தவும் கல்யாண முருங்கை இலையுடன் மிளகு, பூண்டு, மஞ்சள் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தொடர்ந்து 30 நாட்கள் பருகி வரவும்.
இந்த மரத்தை வீட்டு தோட்டத்தில் சுலபமாக வளர்க்கலாம் .
விதைகளை பதியம் போட்டு வளர்ப்பது மிகவும் சிறந்த முறை.
கல்யாண முருங்கை மரத்தின் கிளைகளை உடைத்து நட்டு வைத்தாலே நன்றாக துளிர் விட்டு வளர்ந்து விடும் எல்லா மண்ணிலும் சுலபமாக வளரும்.