சூழலுக்கேற்ற சூப்

எந்த சூப் எப்போது பருகலாம் 
காளான் சூப் 
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

 காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பலவீனமாக உள்ளவர்கள், தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்கள், மட்டன் சூப் அருந்துவது நலம் 

கை கால் எலும்புகளில் முறிவு ஏற்பட்டவர்களுக்கு நெஞ்செலும்பு சூப்.

பிறந்து ஆறு மாதமே ஆன குழந்தைக்கு வெஜ் பாயில் சூப் 

கீரைகளை தவிர்க்க முயலும் குழந்தைகளுக்கு கீரை சூப் மற்றும் தக்காளி சூப் 

எடை குறைவாக இருக்கும் கர்ப்பிணிகளுக்கு மட்டன் சூப் மற்றும் சிக்கன் சூப் 

அப் நார்மலாக இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு வெஜ் சூப்
தக்காளி சூப்பில் தாது உப்புக்கள் அதிகம். இது நோய் எதிர்ப்பு சக்தி தர வல்லது.

மட்டன் சூப்பில் இரும்பு சத்து, பி 12 போன்ற சத்துக்கள் உள்ளன.

 சிக்கன் சூப்பில் புரதம் கொழுப்புச்சத்து அதிகம் உள்ளது. அசைவ சூப்புகளை தொடர்ந்து குடிக்க கூடாது. இது கொழுப்புச்சத்தை அதிகரிக்கச் செய்து வேறு பிரச்சனைகளை கொடுக்கும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை