மேட்சிங் பிளவுஸ் தேர்வு

மேட்சிங் பிளவுஸ் தேர்வு
புடவைக்கு எப்போதும் அதே நேரத்தில் பிளவுஸ்களை தவிர்த்து கான்ட்ராஸ்ட்நிறத்தில் அணியும் போது எடுப்பான தோற்றத்தை அளிக்கும்.

 துணிகளின் மெட்டீரியல், ரகங்கள் மாறுபடும் போது வித்தியாசம் கட்டாயம் இருக்கக் கூடும் .

ஒரு சில புடவையுடன் உள்ள அட்டாச்டு பிளவுஸ்கள் அவற்றின் ரகத்துக்கு ஏற்ப நெகிழ்வுத் தன்மையுடன் இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

 அவரவர் உடல் அமைப்புக்கு தகுந்தார் போல் ஒரு சில டிசைன்கள் அழகை மெருகூட்டக்கூடும் .

பிறருக்கு அழகாக உள்ளதே! என அதே டிசைனில் முயற்சிக்கும் போது நமக்கு சொதப்பி விட வாய்ப்பு உள்ளது. எனவே நம் உடலமைப்புக்கு ஏற்ற புளவுஸ் டிசைன்களை தைய்க்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

 துணிகளை தைக்கும் போது ஸ்ட்ரெயிட் கட்டிங், கிராஸ் கட்டிங் என இரு வழிகள் பயன்படுத்தப்படுகின்றன.

 உடல் அமைப்புகளுக்கு ஏற்ப இந்த வழிமுறைகள் மாறுபடும்போது பிட்டிங் சரிவர அமையும் எனவே நமது ஃபேஷன் டிசைனரிடம் கலந்தாலோசித்து உடலமைப்புக்கு ஏற்ற கட்டிங்கை தேர்வு செய்ய வேண்டும் .

நாம் விரும்பியதை, நமக்கு பிடித்தமான டிசைன்களை டெய்லரிடம் வாய் வார்த்தைகளாக கூறாமல் ஒரு வரைபடமாகவோ அல்லது முடிந்தால் புகைப்படத்தின் மூலமாகவோ தெளிவுபடுத்த வேண்டும். இல்லாவிட்டால் டிசைன்கள் மாறிவிட வாய்ப்பு உள்ளது.

 இதனால் புளவுசை அணியும் போதெல்லாம் ஒரு வித டென்ஷன் உடன் உற்சாக பொழிவின்றி காணப்படுவீர்கள்.

 தோள்பட்டை, கழுத்து பகுதி, ஆம்கோல் போன்ற இடங்களில் எவ்வித சுருக்கமும் இன்றி பர்ஃபெக்டாக இருந்தால் நம் தோற்றமும் பிறரின் பார்வைக்கு எடுப்பாக இருக்கும்.

 பிளவுஸ்கள் அழகை தூக்கி காட்டுவதால் கூடுதல் கவனமுடன் இருப்பது அவசியம் . எனவே புடவையில் எம்ராய்டிங் அழகிய வேலைபாடுகள் ஹெவியாக இருப்பதால் பிளவுஸ்கள் எளிமையாக இருக்க வேண்டும் .

அப்போது தான் அழகிய லுக் கிடைக்கும்.

 இந்த மெட்டீரியல் மிகவும் காஸ்ட்லியானது, இதே டிசைனில் மீண்டும் கிடைக்காது என்பது உள்பட பல்வேறு காரணங்களால் பல ஆண்டுகளுக்கு ஒரே பிளவுசை திரும்பத் திரும்ப வைத்து அணிய பலரும் முயற்சிப்பார். 
இதனால் புளவ்சின் உட்பகுதியில் கூடுதலாக ஒரு சில இன்ச் அளவுக்கு துணியை விட்டு தைய்க்க வலியுறுத்துவர். அப்போது கட்டாயமாக சரியான பிட்டிங் அமையாது என்பதால் அதனை தவிர்க்கவும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை