இயற்கையான அழகுக்கு...

இயற்கை அழகுக்கு

உருளைக்கிழங்கு சாறு,அதனுடன் தயிர், கடலைமாவு மற்றும் சர்க்கரை சேர்த்து முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்து, காய்ந்தபின் கழுவ வேண்டும்.

 இப்படி செய்வதன் மூலம் பருக்கள் நீங்கி முகம் அழகாக இருக்கும்.

 பாலுடன் சிறிது அரிசி மாவு சேர்த்து, முகத்திற்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து பின் குளிர்ந்த நீரில் கழிவினால் சரும துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி சருமம் நன்கு அழகாக காணப்படும்.

சிறிய அளவு வெள்ளரிக்காய் சாறை உதட்டில் தடவுவதால் அதன் கருமை விலகும் அல்லது வெள்ளரிக்காயை நறுக்கி உதட்டில் வைத்து தேய்க்க வேண்டும் அதன் சாறு உதட்டில் படும்படி இதனை செய்ய வேண்டும்.

 ஐந்து நிமிடங்கள் இதனை தொடர்ந்து செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.

 2 டீஸ்பூன்  கடலை மாவுடன், ஒரு டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் சிறிது பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

 முகப்பரு பிரச்சனைக்கு தக்காளி ஒரு நல்ல இயற்கை மருந்தாகும். தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ  முகப்பரு பள்ளம் சுருங்கும்.
 சிலருக்கு சருமத்தில் மேடு பள்ளங்கள் அதிகமாக இருக்கும் அந்த இடத்தில் தக்காளியை சிறு துண்டுகளாக்கி பள்ளமாக இருக்கும் இடத்தில் தடவி பத்து நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை