தினமும் சைக்கிள் ஓட்டினால்.....
தினமும் 30 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவது ஒரு மணி நேரம் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதற்கு ஈடானது.
இளமை தோற்றத்துடன் வாழ்வதற்கும் சைக்கிள் ஓட்டும் பயிற்சி பலன் கொடுக்கும்.
சருமம், எலும்புகள் மற்றும் பிற உறுப்புகளும் சைக்கிள் ஓட்டுவதால் புத்துணர்ச்சி பெற்று இளமைக்கு வழிவகுக்கும்.
உடல் இயக்கத் திறனும் அதிகரிக்கும்.
சைக்கிள் ஓட்டும் போது வேகமாக சுவாசிப்பீர்கள் அதனால் உள்ளிருக்கும் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும். இது ஆரோக்கியத்திற்கு ஏற்றது.
சைக்கிள் ஓட்டுவது ஏரோபிக் உடற்பயிற்சியுடன் தொடர்புடையது.
இதய நோய்களுக்கான அபாயத்தை குறைக்கும்.
மூளையில் செரோடாேனின், டோபமைன் போன்ற ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து எல்லா நேரமும் மனதை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பதற்கும் வழிவகை செய்யும்.
உடல் பருமன் காரணமாக நீரிழிவு, கல்லீரல் நோய் பாதிப்புகள் நேரும். தினமும் 30 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவது உடல் பருமன் பிரச்சனையில் இருந்து விடுபட வழிவகை செய்யும்.
சைக்கிள் ஓட்டும் போது ஏராளமான கலோரிகள் செலவாகுவதால் உடலும் கட்டுக்கோப்பாக மாறும்.