பலன் தரும் பிரண்டை
பிரண்டையைப் போல பிணி நீக்கும் மருத்துவம் இல்லை என்பார்கள். அந்த வகையில் மிகுந்த மருத்துவ குணம் கொண்ட பிரண்டையை கைகளில் நல்லெண்ணையை தடவிக் கொண்டு மேல் தோலை சீவி சிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் வதக்கி தேவையான அளவு புளி, உப்பு, காரம் சேர்த்து அரைக்க வேண்டும்.
பின்பு கடுகு, உளுந்து சேர்த்து தாளித்து துவையல் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர ரத்தமூலம் குணமாகும்.
வயிற்றுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும் பிரண்டை துவையல் செய்து நமது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள பழகிக்கொண்டால் உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும். ஞாபக சக்தி பெருகும். மூளை நரம்புகளும் பலப்படும்.
முற்றிய பிரண்டை தண்டுகளை சிறு துண்டுகளாக நறுக்கி ஊரப் போட்டு உப்பு சேர்த்து ஊற வைத்து உலர்த்தி வற்றலாக செய்து கொள்ள வேண்டும். இந்த வற்றலை எண்ணியில் பொரித்து சாப்பிட பசியின்மை, நாக்கு சுவையின்மை ஆகியன குணமாகும்.
பிரண்டையிலிருந்து சாறு எடுத்து ஆறு தேக்கரண்டி அளவு சாருடன் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரம் சாப்பிட்டு வர மாதவிடாய் ஒழுங்காக வரும்.
பிரண்டை துவையலை குழந்தைகளுக்கு தொடர்ந்து கொடுத்து வர எலும்புகள் உறுதியாக வளரும். மேலும் எலும்பு முறிவு ஏற்பட்டால், உடைந்த எலும்புகள் குறைவாக கூடவும் இது உதவுகிறது.
பிரண்டையை நன்கு காய வைத்து தூளாக்கி வைத்துக் கொண்டு நீரில் குலைத்து எலும்பு முறிவுள்ள பகுதியில் பூசி வரலாம்.
பிரண்டையின் வேரை உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு காலை வேலைகளில் 10 கிராம் அளவு சாப்பிட்டு வர வேண்டும். வஜ்ரவல்லி என்கிற பெயர் காரணம் உடைந்த எலும்புகளை ஒட்ட வைக்கும். பிரண்டையின் குணத்தினாலே ஏற்பட்டது.
அடிபட்ட வீக்கம் குணமாக பிரண்டையிலிருந்து சாறு எடுத்து புளி, உப்பு சேர்த்து காய்ச்சி பொறுக்கும் சூட்டில் அடிபட்ட இடத்தில் மேல் பூச்சாக பற்றுப் போட வேண்டும்.
கவனம் பிரண்டையை சரியாக சுத்தம் செய்யவில்லை என்றால் தொண்டை நமச்சல் ஏற்பட்டு விடும்