ஏழைப் பங்காளன்

வாழவைக்கும் வாழைக்கு  

ஏழை மக்களின் எளிய ஊட்டச்சத்து பழம் தான் வாழைப்பழம்.

 அஞ்சு ரூபாய் முதல் அதிகபட்சமாகவே 50 ரூபாயில் கிடைக்கும் இப்பழத்தில் அத்தனை சத்துக்கள் உள்ளன.

 குறிப்பாக பொட்டாசியம் சத்து வாழைப்பழங்களில் அதிகம் நிறைந்துள்ளதால் தினமும் காலையில் வாழைப்பழம் சாப்பிட நாள் முழுவதும் சுறுசுறுப்பு உற்சாகம் நிறைந்திருக்கும்.

 தினமும் காலை மற்றும் மதிய வேலை உணவுகளை சாப்பிடுவதற்கு முன்பு ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு சிறிது நேரம் கழித்து உணவு சாப்பிட்டு வந்தால் நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனையை நீங்கும்.

 கர்ப்பிணிகளுக்கு காலையில் எழுந்தவுடன் வரும் வாந்தி குமட்டல் தலைச்சுற்றலால் அவர்கள் சோர்வடைய கூடும். இவர்கள் காலை எழுந்ததும் வாழைப்பழம் சாப்பிட்டு விட்டு காலையில் ஏற்படும் குமட்டல் பிரச்சனையை சரி செய்யலாம்.
 பெரும்பாலும் காலை உணவுகளை தவிர்ப்பவர்களுக்கும், அதிக கார உணவுகளை அடிக்கடி உண்பவர்களுக்கும் வயிற்றில் அல்சர் புண் ஏற்படும். தினமும் காலை உணவை சாப்பிடுவதற்கு முன்பு ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு பின்பு காலை உணவை சாப்பிட்டு வந்தால் அல்சர் புண்கள் விரைவில் குணமாகும்.

 இதய நலத்துக்கு பொட்டாசியம் சத்து மிகவும் அவசியமாகிறது. ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்துக்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர வாழைப்பழத்தில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் அதிகம் உதவுகிறது.

 உடல் பருமன் உள்ளவர்கள் 48 நாட்கள் தொடர்ந்து தினமும் இரவு உணவுக்கு பதில் 3 பூம்பழத்தை சாப்பிட்டு சிறிது நேரம் கழித்து வெந்நீர் அருந்தி வந்தால் ஆச்சரியப்படும் வகையில் தொப்பை குறையும். 

வைட்டமின் ஏ 1, பி 6, பி 12, சி, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களின் உடலில் சேர்ந்துள்ள நிக்கோட்டினை வெளியேற்ற உதவும்.

 மூல நோய் உள்ளவர்கள் வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் மூல நோயின் பாதிப்பு குறையும்.

 இரவு உணவுக்குப் பின்பு ஒரு பேயன் வாழைப்பழத்தை சாப்பிட்டு பால் அருந்தி வந்தால் மூல நோய் முற்றிலும் குணமாகும்.

குழந்தை பேரு இல்லாதவர்கள் செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பேரு கிட்டும் .
பழுத்த நேத்திரம் வாழைப்பழத்தை இட்டிலி அவிப்பது போல் அவிழ்த்து எடுத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதனுடன் நெய் கலந்து சாப்பிட்டால் மெலிந்த உடல் தேறும்.

2 கருத்துகள்

புதியது பழையவை