மண முறிவு வேண்டாமே!

மண முறிவை தடுக்கும் வழிமுறைகள்
 ஆயிரம் காலத்துப் பயிர் என பெரியவர்கள் கூறிய திருமண பந்தத்தில் இணையும் பலர் சரிதான புரிதலும் விட்டுக் கொடுத்தலும் இல்லாத காரணத்தால் விவாகரத்து செய்வது அதிகரித்து வருகிறது.

  அன்பு, பாசம், குடும்பம் என்ற கட்டமைப்பு இல்லாமல் சாதாரண காரணங்களுக்காக கூட விவாகரத்து வரை செல்கிறார்கள்.

 வசதியாக வாழ வேண்டும் என்பதற்காக பணம் சம்பாதிப்பது ஒன்றே இலக்கு என்று பலர் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

 குழந்தை பெற்றுக் கொள்வதை கூட பெரும் சுமையாக நினைத்து தள்ளி போடுகிறார்கள்.

 குடும்பத்தில் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதும், விட்டுக் கொடுப்பதும் இல்லாமல் போய்விட்டது.

 அந்த காலத்தில் புகுந்த வீட்டில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலும் நீ தான் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் என்று பெண்ணிடமும் பிறந்த வீட்டையும், உறவுகளையும் விட்டு உன்னை மட்டுமே நம்பி வருபவளை நீதான் கண் கலங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆணிடமும் அறிவுரை சொல்லி வளர்ப்பார்கள்.

 ஆனால் தற்போதைய காலகட்டத்தில் ஏராளமான மணம் முறிவுக்கு பெற்றோர்களே காரணம் ஆக இருக்கிறார்கள்.

 என் பிள்ளை ஏன் பொறுத்துப் போக வேண்டும் என்று கேட்கிறார்கள்.

 மண முறிவை தடுக்கும் வழிமுறைகள்:

 தனக்கு வாழ்நாள் துணையாக முடிவு செய்யப்பட்டு இருக்கும் பெண்ணையோ, ஆணையோ முழு மனதோடு பிடித்திருக்கிறதா? என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு திருமணம் செய்ய வேண்டும்.

 விரைவாக குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.

 அந்த குழந்தையே இருவருக்கும் இடையேயான அன்பு பாலத்தை கட்டமைக்க காரணமாக அமைத்து விடும்.

 ஒவ்வொருவரும் தனது வாழ்க்கை துணையின் இடத்திலிருந்து யோசித்து அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும்.

 பிரச்சனைகளை பொறுமையாக அணுகி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேச வேண்டும்.

 சண்டையை தூண்டி விடுபவர்கள் பெற்றோர்களாக இருந்தாலும் உங்கள் விசயத்தில் அவர்கள் தலையிட அனுமதிக்கவே கூடாது.

 வசதியாக வாழ்வதைவிட நிம்மதியாக வாழ வேண்டும் என்ற தெளிவு வேண்டும்.

 அலுவலகத்தில் மேலதிகாரியிடம் பொறுமையோடு நடந்து கொள்பவர்கள் வாழ்க்கை துணையிடம் சற்றே பொறுமையோடு நடந்து கொண்டால் பிரச்சனையே வராது.

 வெளியிடங்களில் மற்றவர்களை வெல்ல நினைக்கலாம் ஆனால் வாழ்க்கை துணை இடம் விட்டுக் கொடுத்து தோற்றுப் போகும் போது தான் இல்லறம் இனிமையாகும்.

 மண முறிவுக்கு பின்பு மறுமணம் செய்தாலும் அப்போதும் நிறைய விஷயங்களில் அனுசரித்து தான் செல்ல வேண்டி இருக்கும்.
 அதை இப்போதே செய்தால் விவாகரத்துக்கு அவசியம் இருக்காது.

கருத்துரையிடுக

புதியது பழையவை