குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்போம்


 குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டிய சில நல்ல பழக்கங்கள்
வாசிக்கும் பழக்கத்தை பள்ளி செல்லும் வயதிலேயே குழந்தைகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்.

 நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து புத்தகத்தை படிக்க பழகிக் கொள்வது அவர்களின் கல்வி உயர்வுக்கும் உதவும்.

  புத்தகங்களின் மூலம் அவர்களின் அறிவும் வளரும்.

 உட்கார்ந்து இடத்திலேயே விளையாடும் வீடியோ கேம்களை பார்க்காமல் வீட்டுக்கு வெளியில் சென்று வெயிலில் விளையாட அவர்களை பழக்கங்கள்.

 அவர்களுக்கு அதில் உற்சாகமும் கிடைக்கும், மற்ற குழந்தைகளுடன் இணைந்து விளையாடுவதால் சமூகத்தில் பழகும் குணமும் பெறுவார்கள்.

 உடலும் நலமாக இருக்கும்.

 கை கால்களின் இயங்கத் திறனும் சிறப்பாக வளரும்.

 பணத்தை சேமிக்க கற்றுக் கொடுங்கள்.

 பணத்தின் மதிப்பையும் உணர்வார்கள்.

 தங்கள் கண்ணெதிரே உயரும் சேமிப்பை பார்த்து சேமிக்கும் பழக்கத்தையும் பெறுவார்கள்.

டி.வி, கம்ப்யூட்டர், செல்போன் என்று ஒளிரும் ஏதோ ஒரு திரையை பார்த்தபடியே இன்றைய குழந்தைகள் வளர்கின்றனர்.

 அவற்றுக்கு அடிமையாக விடாமல் நேரக் கட்டுப்பாட்டை அறிமுகம் செய்யுங்கள்.

 எல்லாவற்றிலும் ஒழுங்கை கடைப்பிடிக்க அவர்களை பழக்குங்கள்.

 பொம்மைகளை பிரித்து வைத்து விளையாடினால் மீண்டும் அவற்றை அடுக்கி வைக்கச் சொல்லுங்கள்.

படித்து முடித்ததும் புத்தகங்களை ஒழுங்காக பையில் அடுக்கி வைப்பது, தூங்கி எழுந்ததும் படுக்கையை ஒழுங்குபடுத்துவது என்று பழகினால் எல்லாவற்றையும் திட்டமிட்டு ஒழுங்காக செய்யும் திறமை அவர்களுக்கு கிடைக்கும். 

தூங்கி எழுவது, குளிப்பது, சாப்பிடுவது, விளையாடுவது, படிப்பது என்று எல்லாவற்றையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வதற்கு அவர்களை பழக்குங்கள்.

 அவர்களுக்கு சோம்பல் பழகாது.

 எதையும் குறிப்பிட்ட நேரத்துக்குள் செய்வதற்கு பழகிக் கொள்வார்கள்.

 தங்கள் இருக்கும் இடத்தையும், தங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

 ஆரோக்கியமான உணவு, இனிமையான தூக்கம், வியர்வை சிந்தும் விளையாட்டு என்று உடல் நலனுக்கு உகந்த வாழ்க்கை முறையை அவர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.

 பல் துலக்குவது, குளிப்பது, கை கழுவுவது, உணவை வீணடிக்காமல் சாப்பிடுவது, வாயை மூடிக் கொண்டு இரும்புவது, வெளியில் இருந்து வீட்டுக்குள் வந்ததும் கால்களை கழுவுவது, என்று சுகாதாரமான நாகரிகங்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்.

 வளர்ந்த பிறகு அவர்களை எல்லோரும் மதிப்பார்கள்.

 அக்கம்பக்க குடும்பத்தினர் தங்கள் வயதில் இருக்கும் குழந்தைகள் என்று எல்லோருடனும் நட்பாகவும், அன்பாகவும் பழகச் சொல்லுங்கள்.

 நட்புகளை உருவாக்கி பராமரிப்பது வாழ்க்கை முழுக்க தேவைப்படும் ஒரு பண்பு நேரத்தை சரியாக பயன்படுத்தி கடின உழைப்பை கற்றுக் கொடுக்க அவர்களை பழக்குங்கள்.

 நேர்மையாகவும், உண்மையாகவும் இருப்பதன் மூலம் கிடைக்கும் மதிப்பை அவர்களுக்கு உணர்த்துங்கள்.

 அவர்களை இது வாழ்க்கையில் உயர்த்தும்.

நன்றி, ப்ளீஸ், சாரி போன்ற வார்த்தைகளை எந்த மனதடையும் இல்லாமல் அவர்கள் பயன்படுத்தட்டும்.

 யாராவது உரையாடும்போது குறுக்கிடாமல் இருப்பது, பொது இடங்களில் சாப்பிடும் முறை, போனில் பேசும்போது உங்களிடம் பேசுவதற்கு இது சரியான நேரமா? என்று கேட்பது இந்த நாகரீகங்களை அவர்களுக்கு பழக்கப்படுத்துங்கள்.

 இன்றைய குடும்ப மற்றும் சமூக சூழல்கள் பலரையும் சுயநலவாதிகளாக ஆக்கி விடுகின்றன.

 விளையாட்டு பொம்மைகள், நொறுக்கு தீனி, உணவு இன்று எல்லாவற்றையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள அவர்களை பழக்கங்கள்.

 அடுத்தவர்களின் தேவையை அவர்கள் உணர்வார்கள்.

 தங்களிடம் இருப்பவற்றின் மதிப்பையும் அறிவார்கள்.

 எல்லோருக்கும் உதவி செய்யும் நல்ல இதயமும் அவர்களுக்கு வாய்க்கும்.

 தங்களை விட வயதில் மூத்தவர்களை மதிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுங்கள்.

அறிமுகம் இல்லாதவர்களிடம் கூட துணிச்சலாகவும், மதிப்புடனும் உரையாட பழக்குங்கள்.

 எல்லோரிடமும் அன்பும், கருணையும் ஆக பழகுவதன் அவசியத்தை உணர்த்துங்கள்.

வாதம் செய்து எவரையும் விரட்டாமல், அடுத்தவர் கருத்தை மதித்து நட்பாகும் நல்ல குணத்துடன் வளர்வார்கள்.

 பொறுமை இன்றைய தலைமுறை குழந்தைகள் இழக்கும் முக்கியமான பண்பு.

 இதுதான் எதற்காகவும் காத்திருக்கும் பொறுமையற்றவர்களாக அவர்கள் வளர்கிறார்கள்.

 எல்லாவற்றிற்காகவும் அடம் பிடிக்கிறார்கள்..
 எந்த ஒரு விஷயம் நிகழ்வதற்கும் காத்திருக்க வேண்டியதன் அவசியத்தை அவர்களுக்கு புரிய வையுங்கள் கோபமும் எரிச்சலும் இல்லாதவர்களாக அவர்கள் வளர்வார்கள்.

கருத்துரையிடுக

புதியது பழையவை