நேர்காணலை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி
தங்கள் படிப்புக்கு ஏற்ற வேலைக்காக முயற்சிக்கும் பலருக்கும் நேர்காணல் என்றாலே ஒருவித பதற்றம் ஏற்படுவது இயல்பு..
நேர்காணலுக்காக தயாரிப்புகளாக தகுந்த உடை அணிவது, நேர்காணலுக்கு செல்லும் நிறுவனம் மற்றும் வேலையை பற்றிய விவரங்களை அறிந்திருத்தல் போன்றவை அடிப்படையானவை மட்டுமே.
இவற்றைத் தாண்டி நேர்காணலை எதிர்கொள்ளும் திறமையை வளர்த்துக் கொள்வது எப்படி என்பது பற்றிய சில வழிமுறைகள்:
தாக்கம் முதல் சந்திப்பிலேயே நம்மைப் பற்றிய நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவது நல்லது.
நேர்காணலின் போது நம்முடைய தனித்தன்மை மற்றும் ஆளுமை திறனை மதிப்பிடுவார்கள்.
ஆளுமை என்பது தனிப்பட்ட நடத்தை அணுகுமுறை பிறரிடம் பேசும் விதம் போன்றவற்றை சார்ந்தது.
எனவே ஆளுமையை மேம்படுத்தும் போது நேர்காணல் செய்பவருக்கும் நம் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
நேர்காணல் என்றாலே பொதுவான சில கேள்விகள் இருக்கும்.
நம்மைப் பற்றிய அறிமுகம் வேலையை தேர்ந்தெடுப்பதற்கான காரணம், இதற்கு முன்னால் பணி செய்த நிறுவனத்திலிருந்து விலகியதற்கான காரணம் போன்ற கேள்விகளுக்கு எவ்வித தயக்கமும் இன்றி பதிலளிக்கும் போது நம்முடைய தன்னம்பிக்கையை அறிந்து கொள்வார்கள்.
ஆர்வம்
பல நிறுவனங்கள் பணியாளர்களிடம் புதியவற்றை தெரிந்து கொள்வது மீதான ஆர்வம் குழுவோடு இணைந்து செயல்படும்.
உழைப்பு நம்பகத்தன்மை போன்றவற்றை எதிர்பார்க்கின்றன.
அவற்றுக்கு ஏற்றது போல நமது தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நேரம் தவறாமை
நேர்காணலுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக செல்லும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும்.
காலதாமதம் ஏற்படும் போது தேவையற்ற பதற்றம் உண்டாகும்.
இது நேர்காணலின்போதும் எதிரொலிக்கும்.
உண்மை நேர்மை
சுயவிவர பட்டியலில் நாம் அளித்துள்ள விவரங்களின் அடிப்படையிலேயே கேள்விகளும் அமையும்.
எனவே நேர்மையாகவும் தைரியத்தோடும் சரியான தகவல்களை அளிக்க வேண்டும்.
நம்முடைய திறமைகள்
கல்வி அறிவு ஆகியவை நமது பேச்சிலும் எதிரொலிக்க வேண்டும்.
இது நம்மை தேர்வு செய்வதற்கு உதவும் தேர்வாளர்கள் கேட்கும் கேள்விகளை தெளிவாக புரிந்து கொண்டுசிறந்த பதிலை அளிக்க வேண்டும் .
தடுமாற்றத்தோடு பதில் அளிக்கும் போது நமது திறமைகளை வெளிப்படுத்த இயலாமல் போகும்.
நேர்காணல் குறித்த அச்சமும் கவலையும் திறமையை வெளிப்படுத்த தடையாக அமைந்து விடும். எனவே பயமின்றி இயல்பாக நடப்பது நாம் தெளிவானவர் என்பதை புரிய வைக்கும்.
குழு நேர்காணல் இத்தகைய நேர்காணலில் கேள்விக்கு பதில் அளிக்கும் போதும் விவாதத்தில் கலந்து கொள்ளும் போதும் முதலில் பேசுவது முக்கியமானது .
சரியான பதில்களை சரியான விதத்தில் முன் வைப்பது அவசியமானது.
ஊதியம் பற்றிய கேள்விகளுக்கு நாம் வேலை தேடும் துறையில் உள்ள ஊதிய விகிதங்களுக்கு ஏற்றபடி பதில் தருவது நல்லது முறையான தயாரிப்பு அச்சமற்ற தன்னம்பிக்கை ஊக்கமான செயல்பாடு இதையே நேர்காணலில் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழிகள் ஆகும்.