பூனை சகுனம்

பூனை சகுனம் காரண கதை 
பூனை குறுக்கே சென்றால் அபசகுணம் என்று சொல்லுவதற்கு பின்னால் இப்படி ஒரு கதை இருக்காம்.

 அந்த காலத்தில் தெருவிளக்கு கிடையாது.

 ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் மாட்டுவண்டியிலோ அல்லது குதிரை வண்டியில்தான் பயணம் செய்ய வேண்டும்.

 நீண்ட தூர பயணமாக இருந்தால் கட்டாயம் அது இரவு நேர பயணமாக இருக்கும்.

 இப்படி இருட்டு சமயத்தில் குதிரை வண்டிகளோ மாட்டு வண்டிகோ பயணம் செய்யும்போது எதிரே வரக்கூடிய பூனை வண்டியை ஓட்டி செல்பவருடைய கண்களுக்கு தெரியாது.

 பூனையின் கண்கள் மட்டும் தான் இருட்டில் தனியாக தெரியும்.

 அதாவது பொதுவாகவே பூனையின் கண்களை இருட்டில் பார்க்கும் போது ஒரு ரேடியம் போல நமக்குத் தெரியும்.

 பூனையின் உருவம் இருட்டில் தெரியாது. ஆனால் லைட் போட்டு வைத்திருப்பது போல இரண்டு கண்களும் அப்படியே மின்னும்.

 பூனைக்கு மட்டுமில்லாமல் புலி, சிறுத்தை, சிங்கம், கருஞ்சிறுத்தை இப்படி எல்லா வகையான காட்டு விலங்குகளுக்கும் கண்கள் இப்படித்தான் ரேடியம் மின்னுவது போல தெரியும் (ஆங்கிலத்தில் இந்த மிருகங்களை பிக் கேட்ஸ் என்று சொல்லுவார்கள்).

 இப்படி பூனையின் கண்களைப் பார்த்ததும் வண்டியில் பூட்டி வைத்திருக்கும் மாடு அல்லது குதிரை பயந்து மிரண்டு விடக்கூடாது.

 இருட்டில் பூனையின் கண்களை பார்த்து காட்டு விலங்குகள் தான் எதிலே வருகின்றது என்ற அச்சத்தில் குதிரையும் மாடும் மிரண்டு பயந்து விடக்கூடாது என்பதற்காக இந்த வண்டியை ஓட்டுபவர்கள் பூனை எதிரே வந்தால் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு குதிரைக்கும், மாட்டிற்கும் தண்ணீர் காட்டிவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்து செல்வார்களாம்.

 இதே சமயத்தில் குதிரை ஓட்டி செல்பவர்களும் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு தண்ணீர் பருகி விட்டு அதன் பின் தங்களுடைய பயணத்தை தொடர்வார்களாம்.

 இந்த பழக்கம் தான் காலப்போக்கில் மாறி மாறி பூனை குறுக்கே வந்தால் அபசகுணம் தண்ணீர் குடித்துவிட்டு ஓய்வு எடுத்துவிட்டு செல்ல வேண்டும் என்று நம்முடைய ஜனங்கள் மாற்றி வைத்துவிட்டார்களாம்.

 பூனை குறுக்கே வந்தால் அது அபசகுணம் என்று நினைத்து தேவையில்லாமல் உங்கள் மனதை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்.
 எந்த ஒரு காரியத்தையும் குழப்பமாக செய்யும் போது அதில் பிரச்சனைகள் வரத்தான் செய்யும் .

பூனை குறுக்கே வந்தாலும் சரி, வரவில்லை என்றாலும் சரி மனதுருப்தியோடு செய்யக்கூடிய காரியங்கள் வெற்றியில் முடியும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை