நீண்ட இடைவெளிக்கு பின்னர் மின் சாதனங்களை இயக்குகிறீர்களா?
வெளியூர் பயணத்தின் காரணமாக நீண்ட நாட்கள் வீட்டில் இல்லாத போது மின் சாதனங்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பதுண்டு.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவற்றை மீண்டும் இயக்கும் போது கவனம் தேவை.
இதற்கு எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.
துண்டிப்பு
வெளியூர்களுக்கு செல்லும் நாட்களில் டிவி, கணினி சார்ந்த உபகரணங்கள் சலுகை இயந்திரம், கேம் கன் சோல்கள்,மின்விசிறி, விளக்குகள், ஏசி ஆகியவற்றின் இணைப்பை கட்டாயம் துண்டிக்க வேண்டும்.
மின்சாரம் இல்லாத போது அவற்றை சரிவர அணைக்காமல் சென்றாலோ மின்னழுத்த வேறுபாட்டாலோ அவை தானாக இயங்கி விபத்தை உண்டாக்கலாம் .
எனவே இணைப்பை சரியாக துண்டித்து உள்ளோமா? சுவிட்சுகளை அணைத்துள்ளோமா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது முக்கியம்.
அலாரம்
மின்னழுத்த ஏற்றத்தாழ்வு காரணமாக மின் உபகரணங்கள் எளிதில் பழுதடைய வாய்ப்புள்ளது.
அவற்றால் ஏதேனும் விபத்து ஏற்படும்போது அதை உடனடியாக தெரிவிக்கும் அலாரங்களை பொருத்தலாம்.
இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகளை எளிதில் மேற்கொள்ள முடியும்.
நாம் வீட்டில் இல்லாத சமயங்களில் இது உபயோகமாக இருக்கும்.
குளிர்சாதன பெட்டி
நீண்ட நாட்கள் வெளியூர் செல்லும்போது முடிந்தவரை குளிர்சாதன பெட்டியில் பொருட்களை நிரப்பாமல் இருப்பது சிறந்தது.
நீண்ட இடைவெளிக்கு பின்பு மின்சாதன பொருட்களை பயன்படுத்தும் போது முதலில் அதன் இயக்கத்தை சரி பார்க்க வேண்டும்.
மின்கசிவு பழுது உள்ளதா? என்பதை கவனிக்க வேண்டும். சரியாக இயங்குகிறதா? என்பதை உறுதி செய்த பின்பே உபயோகிக்க தொடங்க வேண்டும் .
குளிர்சாதன பெட்டி, ஏசி உள்ளிட்ட பொருட்களை இயக்கும்போது அதிலிருந்து வாயு கசிகிறதா? என்று பரிசோதிக்க வேண்டும்.
குறிப்பாக குளிர்சாதன பெட்டியை இயக்குவதற்கு முன்பு மின் சாதன பழுது பார்ப்பவர் மூலம் சோதித்துக் கொள்வது நல்லது.
பயனுள்ள தகவல்.
பதிலளிநீக்கு