சோகமான இரத்த சோகை

ரத்த சோகையை தடுக்கும் முறைகள்

 ரத்த சோகை என்பது உடலில் ஹீமோகுளோபின் குறைவினால் ஏற்படும்.

 ஹீமோகுளோபின் திசுக்களுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்லும் இரும்புச்சத்து நிறைந்த புரதம் ஆகும்.

 ஒருவரின் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையும்போது ரத்த சோகையை ஏற்படுகிறது.

 ஹீமோகுளோபின் அளவானது ஆண்களுக்கு 14 முதல் 18 கி/டெ.லி மற்றும் பெண்களுக்கு 12 முதல் 16 கி/டெ.லி இருக்க வேண்டும்.

இதன் அளவு குறைவாக இருந்தால் உடல் ஆரோக்கியம் பல வகைகளில் பாதிக்கப்படும்.

அவ்வாறு குறையும் போது நம் உடலில் அதற்கான அறிகுறிகள் தென்படும் ரத்த சோகைக்கான அறிகுறிகள் :

சீரற்ற இதயத்துடிப்பு 

இதயத்துடிப்பு திடீரென அதிகரிப்பது, குறைவது என அதன் துடிப்பு வேகத்தில் மாற்றம் உண்டாகும்.

 எதிரில் மற்ற பாகங்களுக்கு ஆக்சிஜன் சீராக செல்லாததன் காரணமாக இதயம் அதை ஈடு செய்ய துடிப்பை அதிகரித்து, குறைக்கும் .

அதன் வெளிப்பாடு இந்த அறிகுறி.

 வெளியூர் நிறத்தோல் 

ரத்தம் இல்லை என்றாலே தோல் வெளிர் நிறத்தில் காணப்படும்.

அதோடு கண்கள், நகங்கள் மற்றும் பற்களின் ஈறுகளிலும் ரத்தம் இன்றி வெளிர்ந்து இருக்கும்.

 தசை உறுதி இழத்தல் 

இரும்புச்சத்து இல்லை என்றால் தசைகளில் சுருக்கம் ஏற்பட்டு பலவீனமடையும்.

 இதனால் கை, கால்கள் பலவீனமாக இருக்கும்.

தலைவலி 

ஹீமோகுளோபின் சீராக இல்லாததால் தலைவலி, மூச்சடைப்பு ,மயக்கம், தலைசுற்றல் போன்ற பிரச்சனைகள் உண்டாக்கும்.

 இதனால் உறக்கமின்மை, எதிலும் ஆர்வம் இன்மை, எந்த வேலையும் செய்ய முடியாமல் எப்போதுமே தூங்கிக் கொண்டே இருக்கலாம் போன்ற உணர்வு ஏற்படும்.

 ரத்த சோகையை எவ்வாறு தடுக்கலாம் 
ரத்த சோகையை இரும்புச் சத்து நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி 12 போன்ற வைட்டமின்கள் சாப்பிடுவதன் மூலம் தடுக்கலாம்.

 கீரை வகைகள், பீட்ரூட் ,ஆட்டு இறைச்சி, ஈரல், வேர்க்கடலை கருப்பு, கொண்டை கடலை, முட்டை, மாதுளை, நட்ஸ் வகைகள் ,கடல் சார் உணவுகள், பேரிச்சை போன்ற உணவுகளை உட்கொண்டால் ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்படாமல் தடுக்கலாம்.

 ஹீமோகுளோபின் உற்பத்திக்கு வைட்டமின் சி அவசியம்.

 பழங்கள் 

தக்காளி ,நெல்லிக்காய், முலாம்பழம், ஆகிவற்றை உட்கொள்ள வேண்டும்.

 பால், டீ ,காபி குடிப்பதை உணவிற்கு இரண்டு மணி நேரம் முன்பும் பின்பும் தவிர்க்கவும்.

 உணவு முறையில் ஒரு எளிமையான மாற்றம் மற்றும் இரும்புச்சத்து மாத்திரை எடுத்துக் கொள்ளுதல், ஆறு மாதத்திற்கு ஒருமுறை குடற்புழு மாத்திரை கொள்ளுதல் அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவுதல், மேலும் வெளியில் செல்லும்போது செருப்பு அணிந்து செல்லுதல் ஆகியவற்றால் இதனை தடுக்கலாம்.

 ரத்த சோகை சார்ந்த தீவிர பிரச்சனைக்கு மருத்துவரை அணுக வேண்டும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை