காலத்துக்கும் காளான்

காளான்
காளான்களை உணவில் சேர்த்துக் கொள்வதால் எந்தவிதமான நன்மைகள் கிடைக்கின்றன.

 மனிதனுக்கு இயற்கை அளித்த ஆரோக்கியமான உணவு வகைகளில் காளானும் ஒன்று.

இதனை நாம் உட்கொள்வதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன அதனைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்:

 காய்கறிகள் மற்றும் பழங்களைவிட காளானில் அதிக புரதச்சத்து உள்ளது.

 காளானில் நார்ச்சத்து அதிகம் உண்டு.

 அதனால் மலச்சிக்கல், வயிற்று கோளாறு போன்றவற்றை போக்கும்.

 எர்கோதியோனின் (Exgothioneine) இன்னும் சக்தி வாய்ந்த ஆண்டி ஆக்ஸிடன்ஸ் (Anti oxidants) காளானில் இருப்பதால் இது நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.

 போலிக் அமிலம் ,இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இதில் அதிகம் இருப்பதால் ரத்த சோகைக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

 காளானில் உள்ள லென்டிசைன் மற்றும் எரிடாடின் ஆகிய வேதிப்பொருட்கள் ரத்தத்தில் கலந்துள்ள கெட்ட கொழுப்பை குறைத்து ரத்தத்தை சுத்தமாக்குகிறது.

 காளானில் உயர்ரக கால்சியம் சத்து இருப்பதால் நம் உடலில் உள்ள எலும்புகளின் வலிமையை அதிகரிக்க பெருமளவு உதவுகிறது.

 மலட்டுத்தன்மை பெண்களுக்கு உண்டாகும் கர்ப்பப்பை நோய்கள் போன்றவற்றையும் காளான் சரிப்படுத்துகிறது.

 தினம்தோறும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்றுநோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர்.
 வளர்ச்சிக்கு தேவையான அமினோ அமிலங்கள் காளானில் உள்ளதால் இது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிக சிறந்த உணவாக விளங்குகிறது .

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இறைச்சிக்கு மாற்றாக காளானால் செய்யப்பட்ட உணவு வகைகளை கண்டிப்பாக எடுத்துக் கொள்ளலாம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை