எந்த வயதில் திருமணம் செய்தால் நல்லது
திருமணத்தை தள்ளிப் போடுவதால் என்ன நிகழும்?
திருமண பேச்சு என்றாலே பலர் தள்ளி போடுவார்கள். இதன் பின் விளைவுகள் பலருக்கு தெரிவதில்லை. திருமணத்தை கடத்தினால்தான் குடும்பத்தின் பாரத்தை சுமப்பது போன்று இருக்கும் என்று கூறுவார்கள்.
25க்குள் திருமணமாகாமல் அதற்கு மேல் மணம் முடித்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்றும், அதற்காக காரணமும் கூறியிருக்கிறார்கள்:
28 முதல் 30 வயது
திருமணம் ஆனது 28 வயது முதல் 30 வயதில் ஏற்பட்டால் உடனே குழந்தை பிறக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுவிடும்.
இதனால் 30 வயதிற்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைப்பது தவறான விஷயமாகும்.
இதுபோன்று நினைத்தால் குழந்தை பிறப்பதில் பிரச்சனைகள் நிகழ வாய்ப்பு உள்ளது.
மகிழ்ச்சி நிலைக்காது. அடுத்தது கணவருடன் மனைவி சந்தோஷமாக எங்கும் இருக்க முடியாது.
முக்கியமாக குடும்பத்தை நடத்துவதற்கு சரியாக எந்தத் திட்டமும் போட்டு செயல்படுத்த முடியாது.
25 வயது
திருமணம் என்பது 25 வயதில் நடந்தால் கணவன் மற்றும் மனைவி மிகவும் மகிழ்ச்சியாக ஊர் சுற்றி வாழ்க்கையை நன்கு அனுபவித்து, வாழ்க்கையில் இருவரும் ஒருவருக்கொருவர் புரிதலை மேற்கொண்டு வாழ்வை நல்ல நிலைக்கு எப்படி கொண்டு வருவது என்று யோசித்து செயல்படுவார்கள்.
திருமணம் 25 வயதில் ஆனால் இருவருக்கும் புரிதல் சரியாக அமைந்து குடும்ப பக்குவம் அமையப்பெறும்.
அனுபவம் கிடைக்கும். மேலும் இரவில் கணவன் மனைவி வெளியில் சென்று விட்டு எந்த நேரத்திலும் வரலாம்.
நீங்கள் அப்போது திருமணமான புது தம்பதியர்கள் ஆக இருப்பதால் யாரும் எவ்வித தடைகளும் கூற முடியாது.
அத்தோடு உங்களுடைய சந்தோஷத்திற்கு எந்த இடையூறுகளும் இருக்காது.
25 வயதில் திருமணம் நடந்தால் உங்களுக்கு 30 வயதாகும் போதுவாழ்க்கையில் பொறுப்புணர்வு வரும் .
குடும்பத்தை எப்படி நடத்தினால் எதிர்காலத்தில் நாமும் நம் குழந்தையும் சந்தோஷமாக இருக்க முடியும் என்று நன்கு புரிதல் கிடைக்கும்.
தம்பதிகள் தவறுகள் செய்தால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அதனைப் பற்றி விளக்கமாக கூறி தவறி எடுத்துக் கூறுவார்கள்..
இந்த அனுபவத்தினால் உங்களுடைய குழந்தைக்கு எதிர்காலத்தில் பிரச்சனை ஏற்பட்டால் நீங்கள் சரி செய்வதற்கு இது நல்ல அனுபவமாக இருக்கும்.
30 வயது
30 வயதில் திருமணம் செய்தால் உங்களுக்கு பிறக்கவிருக்கும் குழந்தைக்கு திருமணம் செய்வதற்குள் நீங்கள் முதுமை காலத்தை அடைந்து விடுவீர்கள்.
உங்கள் குழந்தை கல்லூரியில் பெய்கின்ற போது உங்களுக்கு ஐம்பது வயதாகி இருக்கும் .
இந்த வயதில் வெளியில் வேலைக்கு செல்வது என்பது மிகவும் கடினமான விஷயமாகும்.
அதனால் திருமணம் முடிப்பதற்கு சரியான வயது 25 வயதில் ஆகும்.