விலை மதிப்பு மிக்க பூ
உலகிலேயே விலை மதிப்பு மிக்க பூ குங்குமப்பூ தான்.
இது கிரிடேசி தாவர குடும்பத்தைச் சேர்ந்தது.
ஆங்கிலத்தில் இதை சாப்ரான் என்று அழைக்கின்றனர் .
வாடாமல்லி நிறம் கொண்ட இப்போவின் இதழ்களை நீக்கிவிட்டு, ஆரஞ்சு நிறம் கொண்ட மகரந்த தாள்கள் சூல் தண்டு போன்ற பகுதிகளை மட்டும் சேகரித்து குங்குமப்பூவாக விற்கின்றனர்.
ஒரு கிலோ குங்குமப்பூ சேகரிக்க லட்சக்கணக்கான மலர்கள் தேவைப்படுகின்றன.
உலகில் குங்குமப்பூ உற்பத்தியில் முதலிடம் பெறுவது ஸ்பெயின் நாடு தான்.
ஆனால் நம் நாட்டின் காஷ்மீர் குங்குமப்பூவுக்கும் தனி மதிப்பு உள்ளது.
எனவே தான் குங்குமப்பூ காஷ்மீர் ராணி, காஷ்மீர் கன்னி என்றும் சிறப்பிக்கப்படுகிறது.
குங்குமப்பூ மருத்துவ குணம் கொண்டது. எனவே பாரம்பரிய மருத்துவ முறைகளில் இது பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
அழகு சாதன பொருட்களிலும் உணவு தயாரிப்பிலும் கூட குங்குமப்பூவை பயன்படுத்துகிறார்கள்.
தமிழ் இலக்கியங்களில் குங்குமப்பூ, ஞாழல் பூ என்று குறிப்பிடப்படுகிறது.
குங்கும பூவை பாலில் கலந்து கர்ப்பிணிகள் பருகி வந்தால் பிறக்கும் குழந்தை நல்ல சிவப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை உலகெங்கும் உள்ளது.
ஆனால் இதற்கு மருத்துவ ஆதாரம் கிடையாது.