ஆபரணங்களை பாதுகாக்கும் வழிமுறைகள்
சாதாரணமாக ஒரு விசேஷம் என்றால் பெண்கள் ஆபரணங்கள் அணிவது வழக்கம்.
அவ்வாறு அணிந்து செல்லும் எந்த வகையான ஆபரணங்களாக இருந்தாலும் அதில் முறையாக பராமரிக்க வேண்டும்.
நகைகளை அணிந்து விசேஷத்துக்கு சென்று வந்த பிறகு அதை காற்றாட கழட்டி வைத்துவிட்டு பிறகு நகைப் பெட்டியில் எடுத்து வைக்கலாம்.
ஆர்ட்டிஃபிஷியல் நகைகள்
ஆர்ட்டிஃபிஷியல் வகைகளை பாலிஷிங் பேஸ்ட்டை கொண்டு மெதுவாக தேய்த்தால் பளபளப்பாகும்.
பழைய கம்பளித்துளியால் பித்தளை அல்லது வெள்ளி நகைகளை தேய்த்தால் கருமை நீங்கி பளபளப்பாகும்.
கிரிஸ்டல் நகைகள்
கிரிஸ்டல் வகைகளை சோப்பு தண்ணீரில் சாஃப்ட் டூப் பிரஸ் கொண்டு சுத்தம் செய்யலாம்.
ஃபேஷன் நகைகள்
ஃபேஷன் நகைகளை மேக்கப் பொருள்களான லோசன், நெயில் பாலிஷ் ரிமூவர், சென்ட் ஹேர் ஸ்ப்ரே ஆகியவற்றிலிருந்து தள்ளி வைக்க வேண்டும்.
முத்து நகைகள்
முத்து நகைகள் வியர்வை படுவதால் மற்றும் சென்ட் பயன்படுத்துவதால் அதன் பளபளப்பை இழக்கும்.
முத்து மாலையை அணிந்த பிறகு பஞ்சு அல்லது டிஷ்யூ பேப்பரால் சுற்றி வைக்க வேண்டும்.