லெக்கில் லெக்கின்ஸ்

லெக்கின்ஸ் அணியும் போது கவனிக்க வேண்டியவை
 கல்லூரி முதல் பணியிடங்கள் வரை இளம் பெண்கள் விரும்பிய அணியும் ஆடை லெக்கின்ஸ்.

 இதை சரியான முறையில் அணியும் போது, உங்கள் தோற்றம் மேம்படும்.

 அதேசமயம் பொருத்தம் இல்லாத வகையில் லெக்கின் அணிவது பெண்களை தர்ம சங்கடமான சூழ்நிலைக்கு உள்ளாக்கும். 

எனவே லெக்கின்ஸ் அணியும் போது கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை பார்ப்போம்.

தளர்வான டாப்ஸ் அணியும்போது லெக்கின்ஸ் பொருத்தமாக இருக்கும்.

 அம்ரெல்லா, அனார்கலி வகை ஆடைகளுக்குலெக்கின்ஸ் சிறந்த தேர்வாக அமையும்.

 ஃபிட்டிங் ஆன டாப்ஸ் அணியும் போது லெக்கின்சை தவிர்க்கவும் .

சரும நிறம் மற்றும் வெளிர் நிறங்களில் லெக்கின்ஸ் அணிவதை தவிர்ப்பது நல்லது.

மேலும் லெக்கின்ஸ் துணி மெல்லியதாக இல்லாமல் சற்றே தடிமனாக இருக்கும்படி வாங்கவும்.

 இதனால் உள்ள ஆடைகள் வெளியே தெரிவது தவிர்க்க முடியும்.

 டுயூனிக் அல்லது குட்டையான சட்டைகள் மற்றும் டாப்ஸ் அணியும்போது லெக்கின்ஸ் அணிவது தவிர்ப்பது நல்லது.

முழங்கால் நீளமுள்ள உடைகள் அணியும் போது லெக்கின்ஸ் பொருத்தமாக இருக்கும்.

 டிசைன்கள் எதுவும் இல்லாத கருப்பு மற்றும் வெள்ளை நிற லெக்கின்ஸ் அணிவது ஆடைகளுக்கு பொருத்தமாக இருக்கும்.

 அதே சமயம் மற்றவர்களின் கவனத்தை அதிகமாக ஈர்க்கும். 

எனவே சிறு சிறு டிசைன்கள் மற்றும் பூக்கள் அச்சு செய்யப்பட்ட லெக்கின்ஸ் அணியலாம் .
தொழில்முறை சந்திப்புகளுக்கு லெகின்ஸ் அணிவதை தவிர்ப்பது சிறந்தது .

அலுவலகத்துக்கு லெக்கின்ஸ் அணியும் போது இரண்டு பக்கமும் கட் இருக்கும் டாப்ஸ் அணிவதை தவிர்க்கவும்.

உங்கள் உடலுக்கு சரியாக பொருந்தும் அளவுக்கு கொண்ட லெக்கின்சைத் தேர்ந்தெடுப்பது முக்கியமானது .

மிகவும் தளர்வாக அல்லது இறுக்கமாக இருக்கும் லெக்கின் அணியும்போது அது மற்றவர்களின் பார்வையை ஈர்க்கக்கூடும்.

தரமான லெக்கின்ஸ் வாங்குவது முக்கியமானது.

விலை சற்று அதிகமாக இருந்தாலும் தரமானதை தேர்ந்தெடுங்கள் .

லெக்கின்ஸ் அணியும் போது காலணிகளை கவனமாக தேர்வு செய்ய வேண்டும் .

உயரம் குறைவாக இருப்பவர்கள் தட்டையான காலணிகளை தவிர்த்து வெட்சஸ் வகை காலனிகளை அணியலாம்.


கோட் வகை ஆடைகளுக்கு லெக்கின்ஸ் அணிவது பொருத்தமாக இருக்கும்.

 நீளமான குர்தி போகோ டாப்ஸ் போன்றவற்றுக்கு முழு நீள லெகின்ஸ் அணியலாம் .

நீளம் குறைந்த டாப்ஸ் அணியும் போது கெண்டைக்கால் நீளமுள்ள லெக்கின்ஸ் அழகாக இருக்கும்.

 டுயூனிக் கோர்ட் வகை ஆடைகளுக்கு கணுக்கால் நீளமுள்ள லெக்கின்ஸ் அணியலாம்.

 ஜிம், யோகா, நடைபெயர்ச்சி, உடற்பயிற்சி , மலையேற்றம் போன்றவற்றுக்கு முழங்கால் நீளமுள்ள லெக்கின்ஸ் அணிவது பொருத்தமானதாக இருக்கும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை