நினைவாற்றல் மேம்பட
வில்வ பழம்
வில்வ பழத்துடன் வெண்ணை சிறிதளவு, நாட்டுச்சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்.
இது மறதியை குறைத்து நிலை மாற்றங்களை அதிகரிக்கும்.
பொடி
தூதுவாளை, வல்லாரை, கருவேப்பிலை பொடி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
இலந்தைப் பழம்
இலந்தைப் பழச்சாறுடன் கருப்பட்டி கலந்து சாப்பிடலாம். இது மூளை செயல்பாட்டை மேம்படுத்தும்,
வல்லாரை
சிறப்பான செயல்பாட்டிற்கு வல்லாரை கீரையை அவ்வப்பொழுது உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
லேகியமாகவும் சாப்பிடலாம்.
வல்லாரை பொடியை பாலில் கலந்து கரிசலாங்கண்ணி வேரின் சாறு, நாயுருவி வேரின் சாற்றை ஒன்றாக சேர்த்து தினசரி ஒரு கரண்டி சாப்பிடலாம்.
இது மூளை சோர்வை நீக்கி புத்துணர்வை உண்டாக்கும்.
நினைவாற்றலை மேம்படுத்தும்.