காபி குடித்தால் ஹெப்பி

காபி குடித்தால் என்ன நன்மை:
 காபி குடித்தால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன.

 காபி மகத்துவம் பெற்று விளங்குகிறது.

 காபி குடிப்பதினால் ஏற்படும் லாபங்கள்.

ஞாபகம் பெருகுகிறது 

காபி பருகினால் நமது ஞாபக சக்தி அதிகமாகவதுடன் தலைவலியும் அகல்கிறது.

 ஒரு சோதனையின் அடிப்படையில் காபி ரத்த ஓட்டத்தை பெருக்குகிறது.

 இதனால் மூளை நன்றாக வேலை செய்வதால், டென்ஷன் இல்லாமல் போகிறது.

 சருமத்திற்கு நலம் வாய்ந்தது

இதிலிருந்து கிடைக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் சுருக்கங்கள் வராமல் பாதுகாக்கின்றது.

 இது சருமத்திற்கு ஒரு பாதுகாப்பு கவசம் ஆகும் .

காபி விதைகளில் உள்ள டிகாஷன் ரேடிகல் ஃப்ரீ குணம் நிறைந்துள்ளது.

 இது சருமத்தின் செல்களை உற்சாகத்துடன் வைக்கிறது.

 இதில் கிடைக்கும் காஃபின் கண்களுக்கு கீழ் ஓடும் ரத்தத்தை குறைக்கிறது.

 கருவளையம் விழுவதையும் தவிர்க்கிறது.

களைப்பை அகற்றுகிறது 

அலுவலகத்தில் வேலை செய்யும்போது சில சமயம் களைப்பாக தோன்றும் அப்போது கொஞ்சம் காபி குடித்தால் களைப்பு பறந்தோடிவிடும்.

ஒரு புத்துணர்ச்சி தோன்றும் 400 மில்லி கிராம் காஃபின் நமக்கு பொறுமையை வளர்க்கும்.

 லிவர் சம்பந்தப்பட்ட நோய்களைத் தவிர்க்கும் 

லிவர் சம்பந்தப்பட்ட நோய் வருவதற்கு காரணம் எண்ணையில் செய்த பொருட்களை அதிகமாக உண்ணுவதும், மசாலா நிறைந்த பொருட்களை அதிகமாக உண்ணுவதும், மது அருந்துவதும், வெளி உணவுகளை அதிகமாக உண்ணுவதும் தான்.

 காபியில் இருக்கும் சில சத்துக்கள் லிவரில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் எடை கூடுதலை தவிர்க்கும்.

 காபியில் இருக்கும் காஃபின் உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்கிறது.

 கொழுப்பு அதிகமாவதை தவிர்க்கிறது.

 ஆகையால் டாக்டரின் அறிவுரையின் பேரில் பிளாக் காபி பருகலாம் .

யூவி கிரணத்திலிருந்து பாதுகாப்பு, சூரியனிலிருந்து வெளிவரும் அல்ட்ரா வயலெட் கிரணங்களால் சருமம் பாதிக்கப்படுகிறது.

 ஆனால் காபி அந்த பாதிப்பு சருமத்திற்கு வராமல் பாதுகாக்கிறது.

 முகம் பளபளக்கும் 

யாருக்குத்தான் தன் முகம் பளபளவென இருக்க வேண்டும் என்று தோன்றாது.

 நீங்களும் அப்படி விரும்பினால் காபி பருகுங்கள் .

காபி சருமத்திற்கு வழவழப்பை தருவதுடன், பல பொழிப்பையும் தருகிறது.

 காபியில் டிஷ்யூக்களை ரிப்பேர்செய்யும் குணம் உண்டு.

 இதனால் செல்கள் வேகமாக பெருகுகின்றன.

 சருமம் ஹைடிரேட்டாக இருக்கிறது.

 ஃப்ளெக்ஸிபிலிடியும் வருகிறது.
 உற்சாகமூட்டுகிறது 

காபியில் இருக்கும் காஃபின் சைகோ ஆக்டிவ் தன்மை கொண்டது .

இதனால் உடலும் மனமும் உற்சாகம் பெருகுகின்றன.

 வயிற்றை சுத்தம் செய்கிறது 

காபி ஒரு டையூரிடி லிக்விட் ஆகும்.

 இதை குடித்தால் சிறுநீர் கழிக்க தோன்றும் .

இதனால் உடலில் இருக்கும் நச்சுப் பொருட்கள் வெளியேறும், இதனால் வயிறு சுத்தமடைகிறது.

1 கருத்துகள்

புதியது பழையவை