வீட்டை மாற்றுவோம்

வீட்டை நேர்த்தியாக மாற்றுங்கள்
வீடு முழுக்க பொருட்களை அடைத்து வைக்காதீர்கள். அப்புறம் உங்களுக்கு உள்ளே புலங்குவதற்கு இடமே இருக்காது .

உங்களுக்கு பிடித்தமான அவசியமான பொருட்கள் மட்டுமே இருக்கட்டும்.

 நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் இருக்கும் பொருட்களை பார்த்து அதே போல வேண்டும் என வாங்கி வைக்காதீர்கள்.

 உங்கள் வீட்டிற்கு எது பொருத்தம் உங்கள் தேவை என்ன என்றெல்லாம் பாருங்கள்.

 எது வசதி என்பதையும் உணர்ந்து முடிவெடுங்கள்.

 பர்னிச்சர்களை தேவையில்லாமல் வாங்காதீர்கள்.

 வீட்டில் நல்ல நிலையில் ஒரு ஷோபா இருக்கும்போது தள்ளுபடிகள் கிடைக்கிறதே என இன்னொன்று வாங்குவது அபத்தம்.
 பர்னிச்சர்களை வாங்கும்போது அதை வீட்டில் எங்கே வைக்கப் போகிறோமோ அந்த இடத்தை அளந்து கொள்ளுங்கள்.
 அதன் பிறகு சென்று வாங்குங்கள்.

 ஹால் மற்றும் படுக்கை அறைகளில் 60 சதவிகிதம் மேற்பட்ட தரை பரப்பை பர்னிச்சர்கள் ஆக்கிரமிக்க கூடாது.

 அப்படி இருந்தால் நெரிசலான போக்குவரத்தில் பயணிக்கும் போது ஏற்படும் உணர்வு வீட்டுக்குள் வந்ததும் ஏற்படும்.

 ஜன்னல்களில் அகன்ற திரைச்சீலை மாட்டி வைப்பது, அறையையும் நேர்த்தியாக காட்டும், வீட்டுக்குள் தூசு படிவதையும் தடுக்கும்.

 அறையில் அடிக்கும் வண்ணங்களில் பட்டையான கோடுகளை வேறு வண்ணங்களில் அடிப்பதும், அழகிய டிசைன்களை சுவர்களில் பதிப்பதும், வீட்டை இன்னும் அழகாக்கும்.

 வீட்டில் எல்லா விளக்குகளுமே பிரகாசமாக எரிய வேண்டும் என்பது இல்லை. சில சமயங்களில் அதுவே கண்களை கூச வைக்கும், உறுத்தும்.

 உங்கள் வசதிக்கு தேவையான அளவு வெளிச்சம் இருப்பதே போதுமானது.

 சிறிய காலில் ஒரு மூலையில் போடப்படும் வட்டமான டைனிங் டேபிள் இடத்தையும் அடைக்காது.

 பார்க்க அழகாகவும் இருக்கும் சுவர்களில் தேவையில்லாத படங்களை மாட்டி வைக்காதீர்கள்.

 சின்ன சின்னதாக நிறைய படங்களை மாட்டி வைத்தால் பார்க்க நன்றாக இருக்காது.

 சுவர்கள் பளிச்சன இருப்பது போலவே கதவுகளும் பொலிவுடன் இருக்க வேண்டும்.

 கதவுகளில் தேவையற்ற ஸ்டிக்கர்களை ஒட்டி வைப்பதை தவிர்க்கவும்.

 சுவர்களில் பொருத்தமான இடங்களில் சரியான அளவில் கண்ணாடிகள் வைக்க வேண்டும்.
 சிறிய அறையில் பிரம்மாண்ட கண்ணாடி பொருத்தமாக இருக்காது.

 பெரிய ஹாலின் சுவற்றில் சின்னதாக கண்ணாடி மாட்டியிருந்தாலும் அழகாக இருக்காது.

 தினம் தினம் பார்த்து பழகி விடுவதால்.

 உங்கள் வீட்டில் பொருட்கள் அலங்கோலமாக குவிந்து கிடக்கின்றனவா? என்பது உங்கள் பார்வையில் படாது.

 அதனால் புதிய கண்களால் வீட்டில் பாருங்கள் சுத்தம் செய்து அடுக்கி வையுங்கள்.

கருத்துரையிடுக

புதியது பழையவை