1. கிச்சனில் கரப்பான் ஆட்டம் காட்டுகின்றனவா? வெள்ளைப் பூண்டினை நசுக்கி கிட்சன் எங்கும் போட்டு விடுங்கள், கரப்பான் டார்ச்சர் குறைந்து விடும்.
2.சமையலறையில் எண்ணெய் சிந்தி விட்டால், அந்த இடத்தில் சிறிது கடலை மாவு தூவி துடைத்தால், எண்னை கரை நீங்கும்.
3.சமையலறையில் இரவில் ஒரு சின்ன பூண்டு பல் போட்டு வையுங்கள். பூச்சிகள் அண்டாது .
4.சமையலறையில் எறும்புகள் வராமல் இருக்க வினிகருடன் தண்ணீர் கலந்து துடைக்கலாம். எறும்புகள் எட்டி பார்ப்பதை நிறுத்தி விடும்.
5. கிச்சனின் ஓரங்களில் வெங்காயத்தை நறுக்கி சுறுசுறு துண்டுகளாக போட்டி வைத்தால் விஷப்பூச்சிகள், கரப்பான்கள் வரத்து குறையும்.
6. சமையலறை பலசரக்கு டப்பாக்களில் இருக்கும் கரைகள் நீங்க, உப்பு கலந்த நீரில் துடைக்கலாம்.
7. சிலிண்டர், கல் சட்டிகள் வைக்கும் இடங்களில் துரு கறைகள் இருப்பதை காணலாம்.அங்கே எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து துணியால் துடைத்தால் துருக்கறை நீங்கும்.
8. சமையலறை மேடையை துடைக்கும் போது சிறிது வினிகர் சேர்த்து துடைத்தால் பூச்சிகள் அண்டாது.மேலும் பால் பொங்கிய கறைகள் குழம்பு கொட்டிய கறைகளும் வாடை இன்றி போய்விடும்.
9. டைனிங் டேபிளில் ஈக்கள் அட்டகாசம் செய்தால் அங்கே ஒரு கிண்ணத்தில் நீரூற்றி புதினா மற்றும் சிறுது உப்பு சேர்த்து வைத்தால் ஈக்கள் குறையும்.
10. சமையலறை சிங்கில் ஒரு சிறு கற்பூர கட்டியை போட்டு வைத்தால் பூச்சிகள் துளைகள் வழியே வராமல் தடுக்கலாம் மேலும் அந்துருண்டையை விட கற்பூரம் கெமிக்கல் குறைவு மேலும் இயற்கையான நறுமணமும் கொடுக்கும்