மறைந்து வரும் மூக்கு வாழி
நாகரீகம் பாேன்ற காலத்தில் பழக்கத்தில் இருந்து வந்த மூக்கு வாழி அணியும் பழக்கம் மருகி வருகிறது.
பண்டைய காலத்தில் ஆண், பெண் வேதமின்றி மூக்கில் அறிவிக்கப்படும் அணிகலன் மூக்கு வாழி.
நீண்ட நாட்களாக குழந்தை பேரு இல்லாமல் இருந்த தம்பதிகளுக்கு, பிறக்கும் முதல் குழந்தைகளுக்கு, இரண்டாம் குழந்தைகள் தங்காமல் இறந்து போக மூன்றாவதாக பிறக்கும் குழந்தைகளுக்கும் தங்க கம்பியில் சிவப்பு கலர் பாசிகட்டி அணிவிக்கப்படும் அணிகலன் மூக்கு வாழி.
சில குழந்தைகளுக்கு கிரக ரீதியாகவும் இதனை அணுவிப்பது உண்டு.
இந்த மூக்கு வாழியை குழந்தைகளுக்கு அணிய வைப்பதிலும் ஒரு வினோத பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது.
சொந்த காசில் இதனை செய்ய மாட்டார்கள்..
பெற்றோர்கள் யாசகம் எடுத்து, கோயிலில் குழந்தைக்கு மொட்டை அடித்து, தவிட்டுக்கு குழந்தையை பெற்று, அதன் பின்பே அக்குழந்தைக்கு மூக்கு வாழியை அறிவிப்பர்.
அவ்வாறு அறிவிக்கப்படும் மூக்கு வாழி குழந்தையின் கல்யாண வரை மூக்கில் கிடக்கும்.
ஆண் குழந்தையின் மூக்கு வாழியை கழற்றி கடலில் வீசுவர்.
'
பெண் குழந்தையின் மூக்கு வாழியை கழற்றிவிட்டு மூக்குத்தியை அணிவிப்பர்.
இன்றைய நாகரீக உலகத்தில் மூக்குவாழி என்ற வார்த்தையை மெல்ல மெல்ல மறந்து மறைந்து விட்டது.
இது பற்றி மூன்றாவது தலைமுறையாக இந்த அணிகலனை தயாரித்து இத்தொழிலில் ஈடுபட்டு வரும் நெல்லை மாவட்டம் வாகைக்குளம் கிராமத்தைச் சார்ந்த 73 வயதான பொற்கொல்லர் கனி ஆசாரி கூறுகையில்:
மூக்குவாழி அணிவதன் மகத்துவம் யாருக்கும் தெரிவதில்லை. எல்லா குழந்தைகளுக்கும் மூக்கு வாழி அணிவிப்பது கிடையாது. குழந்தைகள் தங்குவதற்கும், குடும்பம் நன்றாக இருப்பதற்கும் அணிவிக்கப்பட்டு வந்தது.
இப்போது குடும்பத்தில் மூணாவது குழந்தை என்பதே அபூர்வமாகிவிட்டதாலும் அழகு மற்றும் நாகரீகத்தாலும் இந்த பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது என்கிறார்.