காலை உணவும் எடையும்

காலை உணவும் உடல் எடையும் 

ஒரு நாளை ஆரோக்கியமாக தொடங்குவதற்கு காலை உணவு முக்கியமானது.

இரவில் நன்றாக தூங்கி, காலையில் எழுந்ததும் சாப்பிடும் முதல் உணவு ஆரோக்கியமானதாகவும் , புத்துணர்வு அளிப்பதாகவும் இருக்க வேண்டும்.

 அதன் மூலம் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க முடியும் முளைக்கட்டிய தானியங்கள், பாசிப்பயிறு, நிலக்கடலை , பழங்கள் அல்லது பழச்சாறு ,ராகி கஞ்சி, சத்துமாவு கஞ்சி, இட்லி ,தோசை சிறுதானிய பொங்கல், போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை காலை உணவாக சாப்பிடலாம்.

தவிர்ப்பதால் தீமைகள்
 காலை உணவை தவிர்ப்பதால் வரும் பிரச்சனைகள் உடல் சோர்வு அடையும்.

 நாள் முழுவதும் இயங்குவதற்கான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது..

 இரவு முழுவதும் உணவு சாப்பிடாமல் நீண்ட நேரம் வயிறு காலியாக இருப்பதால் அமிலம் அதிகமாக சுரந்து கொண்டே இருக்கும் .

இந்த நேரத்தில் காலை உணவு தவிர்க்கும் போது வயிற்றுப்புண் போன்ற பிரச்சனைகள் வரும் உடல் எடை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

 காலையில் சாப்பிடாமல் நீண்ட இடைவெளிக்கு பிறகு உண்ணும் போது நம்மை அறியாமல் அதிகமாக சாப்பிடக்கூடும் .

காலை உணவின் முக்கியத்துவம் உடல் எடையை குறைப்பதில் காலை உணவு முக்கிய பங்கு வகிக்கிறது.

 சாப்பிடாமல் இருந்தால் உடல் குறையும் என பலர் கருதுகின்றனர். அவர்கள் முதலில் தவிர்ப்பது காலை உணவை தான் இது பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைந்துவிடும்.
நோய்கள்
 குறிப்பாக நீரழிவு நோய்கள் காலை உணவை தவிர்ப்பதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடும்.

ஓரிரு நாட்கள் காலை உணவை தவிர்க்கும் போது பெரிய வித்தியாசம் தெரியாது .

நாளடைவில் இது உடல் நிலையில் எதிர்மறை மாற்றத்தை ஏற்படுத்தும்.

 சில உடம்பு முறைகள் காலை உணவை தவிர்க்க வேண்டும் என பரிந்துரை செய்கின்றன.

 இது ஆரோக்கியமானதா என மருத்துவரின் ஆலோசனையை கேட்டு செயல்பட வேண்டும் .

காலை உணவை அரசன் போல சாப்பிட வேண்டும் என பல மொழி உள்ளது.
 அரசன் போன்ற அனைத்து ஊட்டச்சத்துக்கள் மிக்க உணவை சாப்பிட வேண்டும் என்பதை இதன் பொருளாகும் இது உடல் எடையை சீராக வைத்துக் கொள்வதற்கு உதவும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை