வெட்டி இருக்கா....?


வெட்டி வேரின் நன்மைகள் 

வெட்டிவேர் என்பது புல் வகையை சார்ந்தது.

 லேசான பழுப்பு நிறத்தில் இருக்கும்.

 இது நாவறட்சியை போக்கும்.

 உடலுக்கு குளிர்ச்சியை தரும்.

 முடி உதிர்வதை தடுக்கும்.

 கோடை காலத்தில் ஏற்படும் வேர்க்குரு, நீர்க்கடுப்பு ஆகிய பிரச்சனைகளுக்கு சிறந்ததொரு நிவாரணி.

 இது சிறுசிறு துண்டுகளாகி தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் பருகினால், தூக்கமின்மை பிரச்சனைக்கு தீர்வாகும்.

வெட்டிவேர் பொடியுடன், திப்பிலி பவுடரும், தேனும் கலந்து சாப்பிட இருமல் சரியாகும்.

 வெட்டிவேர் பொடியை குலைத்து உடம்பில் பூசி குளித்தால் தோல் பிரச்சனைகள் அண்டாது.

 வெட்டிவேரில் இருந்து எடுக்கப்படும் எண்ணை உடலில் உள்ள தழும்புகளைப் போக்கும்.

 இந்த எண்ணையை முகர்ந்தால் மன அழுத்தம் நீங்கும்.
வெட்டிவேர் ஊறிய நீரை குடிப்பதால் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்.

 மண்பாண்டத்தில் ஊறிய வெட்டிவேர் நீருடன், எலுமிச்சைசாரு கலந்து பருகினால் அதுவே சிறந்த குளிர்பானம் ஆகும்.

 வெட்டி வேறு உடன் ரோஜா இதழ்களையும், பாசி பருப்பையும் பொடியாக்கி உடலில் தேய்த்து குளித்தால் உடல் பளபளப்பாக இருக்கும்.

 வெட்டிவேர் விசிறியும், வெட்டிவேரில் செய்யப்பட்ட திரைச்சீலையும் கோடை காலத்தில் நல்ல குளிர்ச்சி தரக்கூடியது.

கருத்துரையிடுக

புதியது பழையவை