முட்டை எங்கிருந்து வந்தது...

கோழிகள் வருகை
#################
1.கிமு 800 இல் தான் கிரேக்கத்திற்கு கோழிகள் வந்தன.

 2.அதற்கு முன் அங்கே காடை முட்டைகள் பயன்பாட்டில் இருந்தன.

 3.கிமு 600 லிருந்து ஐரோப்பியர்களும் முட்டைகளுக்காக கோழிகளை வளர்க்க ஆரம்பித்தனர்.

 4. எகிப்தியர்களும் சீனர்களும் வெதுவெதுப்பான களிமண் அடுப்புக்குள் வைத்து கோழி முட்டைகளை செயற்கையாக அடை காத்தனர்.

நம்பிக்கை

1. 1490களில் கொலம்பஸ் அமெரிக்காவுக்கு வந்த போது கோழிகளைக் கொண்டு வந்ததாக சிலர் சொல்கின்றனர்.

 2. கொலம்பஸ் வருவதற்கு முன்பே அமெரிக்காவில் நாட்டுக்கோழிகள் இருந்ததாக வேறு சிலர் சொல்கின்றனர்.

முட்டை விநியோகம்

 1.1900 களில் அமெரிக்காவில் கோழிப் பண்ணைகள் அமைக்கப்பட்டு குடும்பங்களுக்கு முட்டை விநியோகம் செய்யப்பட்டன.

 2.குடும்பங்களுக்கு போக மீதியான முட்டைகள் விவசாயிகளின் சந்தைகளில் விற்கப்பட்டன.

 3.முட்டை விற்பனை நல்ல லாபத்தை கொடுத்ததால் சில பண்ணைகள் 400 கோடிகள் வரை வளர்த்தன 
பாதிப்பு

1.அந்த காலத்தில் இவ்வளவு கோழிகளை வளர்ப்பது என்பது ஆச்சரியம் 

2.1920இல் வேட்டைக்காரர்கள் நோய்கள் காலநிலையால் கோழிகள் பாதிக்கப்பட்டன

 3.முட்டை இடவும் குஞ்சு பொரிக்கவும் ஆரோக்கியமான கோழிகளை மட்டுமே அமெரிக்க பண்ணைகள் தேர்வு செய்தன 

4.இதனால் ஒரு கோழி வருடத்திற்கு 150 முட்டைகள் வரை இட்டன

உணவாக மாறிய முட்டை 

 1.இரண்டாம் உலகப் போர்களுக்கு பின் உலக அளவில் முட்டை முக்கிய உணவாக மாறியது

 2.சில நாடுகளில் தினசரி உணவில் முட்டை சேர்க்கப்பட்டது 

3.உலகெங்கும் முட்டைகளின் தேவை அதிகரித்தது 

4.அதனால் 1960களில் அமெரிக்காவில் கோழி பண்ணை என்பது பெரிய பிசினஸ் ஆக வளர்ந்தது 

5.மற்ற நாடுகளும் பெரிய அளவில் கோழிப்பண்ணைகள் அமைப்பதில் ஆர்வம் காட்டின

 6.அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் மட்டுமே முட்டைகளை கழுவி விற்பனை செய்கின்றன 

7.இன்று முட்டை விற்பனை உலகின் முக்கிய தொழிலாகவே மாறிவிட்டது

8.  உலக அளவில் கோழி, வாத்து, காடை போன்றவற்றின் முட்டைகளே அதிக அளவில் விரும்பி சாப்பிடப்படுகின்றன.

 9.சில நாடுகளில் நெருப்புக் கோழியின் முட்டைக்கு தனி மவுசு.

சத்து

கோழி முட்டையில் கார்போஹைட்ரேட் 1.12கிராம்,கொழுப்பு 10.6கிராம், புரதச்சத்து 12.6கிராம் ,வைட்டமின் ஏ, வைட்டமின் டி, என 10 வகையான வைட்டமின்கள், கால்சியம், இரும்பு, உள்ளிட்ட ஏழு வகையான தாது சத்துக்கள் உட்பட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
 உற்பத்தி
 1.2020 ஆம் ஆண்டில் ஒவ்வொரு நாடும் எவ்வளவு முட்டைகளை உற்பத்தி செய்தன என்ற தகவல் வெளியாகி உள்ளது.

 2.அதன்படி 59650 கோடி முட்டைகளை உற்பத்தி செய்து முதலிடத்தில் சீனா உள்ளது 

3. 11440கோடி முட்டைகளுடன் இந்தியா இரண்டாம் இடத்திலும்

 4. 11210 கோடி முட்டைகளுடன் இந்தோனேசியா மூன்றாம் இடத்திலும்

 5. 11160 கோடி முட்டைகளுடன் அமெரிக்கா நான்காம் இடத்திலும் உள்ளன.

புனிதம்

 1.எகிப்தியர்கள் முட்டைகளைப் புனிதமாக கருதினர். 

2.அதனால் வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களின் போது முட்டைகளை கூடையில் வைத்து கோவிலுக்குள் பாதுகாத்தனர் 

உணவுகள் 

1. ஆம்லெட் ,ஆப் ஆயில், கலக்கி என முட்டையிலிருந்து நேரடியாக சில உணவுகள் தயாரிக்கப்பட்டாலும் பரோட்டா ,கேக் என 100க்கும் மேலான உணவுகளில் மறைமுகமாக செயல்படுகிறது.

 2. முட்டை கம்போடியாவில் வறுத்த முட்டையும் ,அரிசியும் சேர்த்து சமைக்கப்படும் பாய் போங்க் மோன்

3. இத்தாலியில் முட்டை, சீஸ், மிளகு, கொண்டு செய்யப்படும் கார்பொனாரா 

4. ஜப்பானில் முட்டை மற்றும் ஜிங்க்கோ விதைகளால் தயாரிக்கப்படும் சவான்முஷி

5. துருக்கியில் முட்டையுடன் யோகர்ட் மற்றும் பூண்டு சேர்த்து சமைக்கப்படும் கில்பர் என ஒவ்வொரு நாட்டிலும் முட்டையால் சமைக்கப்படும் உணவுகளின் பட்டியல் நீள்கிறது.

 ஆம்லெட் 

1.ஆம்லெட் கண்டுபிடிக்கப்பட்ட துல்லியமான நாள் குறித்த தகவல்கள் இல்லை.
 
2.பண்டைய பாரசீகர்கள் ஆம்லெட்டை கண்டுபிடித்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

3. 11-ம் நூற்றாண்டின் மத்தியில் இருந்து ஆம்லெட் என்னும் பிரெஞ்சு வார்த்தை பயன்பாட்டில் இருந்து வருகிறது.

4.  ஒவ்வொரு நாட்டிலும் வித்தியாசமான முறையில் ஆம்லெட் சமைக்கப்படுகிறது.

 5. குறிப்பாக ஈரானில் மூலிகைகள் சேர்த்து அதனை ஆம்லெட்டை சமைக்கின்றனர் 

6. வியட்நாமில் முட்டையின் மஞ்சள் கருவில் தயாரிக்கப்படும் எக் காபி, வெகு பிரபலம் சகே என்னும் மது, சர்க்கரை முட்டை சேர்க்கப்பட்ட டமகோசகே எனும் பானம் ஜப்பானில் புகழ்பெற்றது.

7. முட்டை பானம் இத்தாலியில் தயாராகும் பாம்பர்டினோ எனும் மதுபானத்தின் மூலப்பொருளே முட்டைதான்.

 8. அமெரிக்காவில் நிறைய காக்டெய்ல்களில் முட்டைகளின் வெள்ளை பாகத்தை அழகுக்காக சேர்க்கின்றனர் .

வண்ண முட்டைகள்

1. சிலியை சேர்ந்த அரவ்கானா என்ற கோழியினம் நீளம் பச்சை பழுப்பு மற்றும் பிங்க் வண்ணங்களில் முட்டைகளை இடுகின்றது.

2. மஞ்சள் கரு இயற்கையாகவே வைட்டமின் டி சத்துக் கொண்டது.

3. மஞ்சள் கரு பாக்டீரியா 20,000 முட்டைகளில் ஒரு முட்டை மட்டுமே பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டிருக்கும்.

4. நீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவர்களாக இருந்தால் 84 வருடத்திற்கு ஒருமுறை பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட முட்டையை சாப்பிட நேரிடும் .

5.பெரிய முட்டை 2010 ஆம் ஆண்டில் இங்கிலாந்தை சேர்ந்த ஹாரியட் என்ற கோழி உலகிலேயே பெரிய முட்டையை இட்டது இதன் விட்டம் 9.1 அங்குலம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை