கேரட்டின் கேரக்டர்

கேரட் வேணுமா கேரட் 
1. பலருக்கு மிகவும் பிடித்த உணவு கேரட்

2.  சமைக்காமல் அப்படியே சாப்பிடும் காய்கறிகளில் கேரட்டும் ஒன்று.

 3. கிபி 900 ஆம் ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில்தான் கேரட் முதன் முதலில் பயிரிடப்பட்டது.

4. அதற்குப்பின் மத்திய ஆசியா முழுமைக்கும் பரவியது என்றும் கூறப்படுகிறது.

5. சர்வதேச கேரட் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 4-ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

6. மனித உடல் 60 சதவிகிதம் நீரால் ஆனது கேரட்டில் நீர் 88 சதவீதம் உள்ளது.

7. கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் அதை சாப்பிடுபவரின் உடலில் சத்தாக மாற உதவுகிறது.

8. உலகின் மிக நீளமான கேரட், இங்கிலாந்தை சேர்ந்த ஜோ அதர்டன் என்பவரால் 2016ஆம் ஆண்டில் வளர்க்கப்பட்டது.

9.6245 மீட்டர் நீளம் கொண்ட அந்த கேரட் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது.

10. குழந்தைகளின் மதிய உணவில் சிப்ஸ் கொடுப்பதற்கு பதில் சின்ன சின்ன கேரக்டர்களை மெலிதாக நறுக்கி கொடுக்கும் பழக்கம் சில நாடுகளில் உள்ளது.

11. அதை பேபி கேரட் என்றும் அழைக்கிறார்கள்.
12. உலக அளவில் பிடித்த காய்கறிகளை பட்டியலிடும்போது கேரட் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.

13. கேரட் நமது உடலுக்கு ஏராளமான சத்துக்களை அள்ளித் தருகிறது.

14. இதில் வைட்டமின் ஏ, சி, டி ,இ, கே மற்றும் மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் , ஆகிய சத்துக்கள் உள்ளன.

15. உணவில் கேரட்டை தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் அது உடலில் சேரும் நச்சுப் பொருட்களை அகற்றி சுத்தம் செய்யும் அற்புதமான பணியை செய்யும்.

16. உலக அளவில் சீனாவில் தான் அதிகமாக கேரட் விளைவிக்கப்படுகிறது.

17. அங்கிருந்தே கேரட் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

18. இந்தியாவில் ஹரியானா, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், உத்திரப்பிரதேசம், ஆகிய மாநிலங்களில் கேரட் சாகுபடி அதிக அளவில் உள்ளது.

19. கேரட் என்றுமே செம்மஞ்சள் நிறம் தான் நம் நினைவுக்கு வரும்.

20. ஆனால் தற்போது மரபணு மாற்றம் நடத்தப்பட்டு 20க்கும் அதிகமான நிறங்களில் கேரட் கிடைக்கிறது.

21. கேரட் சாகுபடியில் அது பறிப்பதற்கான வளர்ச்சி அடைய நான்கு மாதங்கள் ஆகும்

கருத்துரையிடுக

புதியது பழையவை