மகிழம் பூ முறுக்கு
பச்சரிசி (தண்ணீர் விட்டு களைந்து நிழலில் உலர்த்தியது) -300 கிராம்
பாசிப்பருப்பு - 100 கிராம்
கடலைப்பருப்பு - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
காய்ச்சிய எண்ணை - இரண்டு டீஸ்பூன்
செய்முறை
பாசிப்பருப்பு, கடலைப்பருப்பை சிவக்க வறுத்து ஆறவிட்டு, அரிசி உடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
இத்துடன் காய்ச்சிய எண்ணை, உப்பு, பெருங்காயத்தூள், சேர்த்து தேவையான நீர் விட்டு பிசையவும்.
மாவை முள்ளு முறுக்கு அச்சில் போட்டு சூடான எண்ணெயில் முறுக்காக பிழியவும்
சிவந்த பின் எடுக்கவும்