மூட்டு வலியை முட்டித் தள்ளுவோம்...

மூட்டு வலியை விரட்டும் உணவுகள்
1 மூட்டு வலியை குறைக்கும் அசைவ உணவு மீன் தான்.

2. மீன்களில் வஞ்சிரம்,சார்டைன் ஆகிய மீன்களில் உள்ள ஒமேகா 3 என்னும் கொழுப்பு அமிலம் மூட்டு வலியை குறைக்கிறது.

 3. சைவ உணவுகாரர்களுக்கு ஒமேகா 
3 சோயா பீன்ஸ், பருப்புகள் மற்றும் கால்சியம், வைட்டமின் டி, வைட்டமின் சி ஆகியவை மூட்டு வலியை குறைக்கும்.

4. முருங்கைச் சாறு 20 மில்லியுடன், அதே அளவு வெள்ளரிக்காய் சாறு, பீட்ரூட் அல்லது கேரட் சாறு அருந்திட வலி பெருமளவு குறையும்.

5. மூட்டு வலியுடன் எரிச்சலும், வீக்கமும் இருந்தால் அதை குறைக்க அன்னாசி பழச்சாறு அருந்தலாம்.
6. வைட்டமின் சி அதிகம் உள்ள சாத்துக்குடி, எலுமிச்சை, ஆப்பிள் கொண்டை கடலை முதலியன மூட்டு வலியை குறைக்கும்.

7. மூட்டு வலியை குறைக்க எள் துணை புரிவதால் எள் உருண்டையுடன் ஒரு கைப்பிடி அளவு எள் ஊறிய தண்ணீரை அருந்த எலும்பு தசைகளின் வலியை முன்கூட்டியே தடுக்கும்.

8. இரவில் செம்பு பாத்திரத்தில் கைப்பிடி அளவு தூய எள்ளை போட்டு காலையில் அந்த நீரை அருந்த நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

9. உடல் எடையை குறைத்து , கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொண்டு, உடற்பயிற்சி, ஆசனங்கள், சூரிய ஒளியில் அமர்தல், என வழக்கமாக்கிக் கொள்ள மூட்டு பிரச்சனை வராது.

கருத்துரையிடுக

புதியது பழையவை