புத்தகப் புழு பெயர் காரணம்

புத்தகப் புழு பட்டப்பெயர் காரணம்
 1.புத்தகம் வாசிப்பவர்களை எந்த நேரமும் நூல்களை படிக்க விரும்புபவர்களை புத்தக புழுக்கள் என்று அழைக்கிறோம்.

2.கரையான்கள் புத்தகங்களை அரிக்கும் என்று தெரியும்.

3.புழு எப்படி சாப்பிடும் என்ற சந்தேகம் வருமே! ஆமாம். 

4.இந்தப் பட்டப் பெயர் எங்கிருந்து வந்தது.

 5.அதிகமாக புத்தகங்களை விரும்புகிறவரை மேலைநாட்டில் பிப்ளியோபைள்ஸ் (Bibliophiles) என்கிறார்கள்.

6.இதன் பொருள் புத்தக விரும்பிகள் என்று சொல்லலாம்.

 7.இவர்கள் புத்தகங்களை நேசிப்பதுடன் புத்தகங்களை சேகரித்து வைக்கவும் விரும்புகின்றனர்.

8.புத்தகப் புழு என்று சொல் கிபி 1500 களிலிருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

9.அன்றையின் நூலகங்களில் இன்றைய தினங்களில் இருப்பதை போன்று குளிரூட்டும் அல்லது வெப்பமூட்டும் முறைகள் இல்லை.

 10.இதன் விளைவாக பல நூலகங்கள் தங்களிடம் உள்ள புத்தகங்களை பாதுகாக்க கையாளவில்லை.

11. நூலகங்கள் மிகவும் தூசி படிந்து, பல்வேறு பூச்சிகளையும் காெண்டு இருந்தன.
 12.இந்த பூச்சிகள் தின்னும் தாள்களில் சில பக்கங்கள் புழுக்களின் வடிவில் காணப்பட்டன.

 13.தாள் , அதில் ஒட்டப்பட்டு இருக்கும் பசை போன்றதையே இவற்றின் விருப்ப உணவாக இருந்தன.

 14.இந்த வகை பூச்சிகள் தங்களது வாழ்நாள் முழுவதும் புத்தகங்களிலே செலவிட்டன.

15. இதுதான் புத்தகப் புழு என்ற இயற்கையான படிமத்தை புத்தகத்தை விரும்புபவர்களை நோக்கி கூறுவதற்கு காரணமாக அமைந்தது.

 16.ஏனெனில் புத்தக விரும்பிகளும் தங்கள் வாழ்நாள் முழுவதும் புத்தகம் வாசிப்பதிலேயே செலவிட விரும்பினார்.

 17.எனவே நூலகத்துக்கு செல்வதை ஒரு மகிழ்ச்சி தரும் அனுபவமாக கருதினால், எப்பொழுதும் ஒரு புதிய புத்தகத்தை படிக்க விரும்பினால் நீங்கள் ஒரு புத்தக புழுவாக இருக்கலாம்.

18.உலகில் உங்களைப் போன்றே கோடிக்கணக்கானோர் உள்ளனர்.

19. தேவையற்ற தீய பழக்கங்களில் மூழ்குவதை விட புத்தக வாசிப்பு என்பது சிறந்த பழக்கம் தான்.

 20.பெருமையாக ஒப்புக்கொள்ளுங்கள் நான் புத்தக புழு தான் என்று

கருத்துரையிடுக

புதியது பழையவை