காசிப்பானை...



பெண்களுக்கு திருமணத்தின் போது கொடுக்கப்படும் சீர்வரிசையில் நிறைய பாத்திரங்கள் இடம் பெற்றிருக்கும் அவற்றில் முக்கியமாக இடம்பெறுவது காசி பானையாகும் அதன் பின்னணியை இங்கே காணலாம்

காசு பானை எனும் காசி பானை
காசி பானை முற்காலத்தில் காசு பானை என்று அழைக்கப்பட்டது.

 ஏனென்றால் பழங்காலத்தில் நாணயங்கள் செம்பு எனும் உலாேகத்தால் செய்யப்பட்டன.

 அந்த பானையும் செம்பின் மூலம் செய்யப்பட்டதால் காசு பானை என்ற பெயர் வந்தது.

காலப்போக்கில் பேச்சு வழக்கால் காசி பானை என்று மாறியது.

ஆரோக்கியம் காக்கும் செம்பு
செம்பு (தாமிரம்) பாக்டீரியா எதிர்ப்பு நுண்ணுயிர் எதிர்ப்பு தன்மை கொண்டது.

பழங்காலத்தில் மக்களிடம் ஒரு வழக்கம் இருந்தது.

 கோவில் மற்றும் குடிநீர் குளங்களில் செம்பு நாணயங்களை போடுவார்கள்.

 அவற்றில் உள்ள செம்பு தாதுக்கள் அந்த குளத்தில் கலந்து தண்ணீரை வலுப்படுத்தும்.

ஊர் மக்கள் தினமும் அதை வளமான தண்ணீரை குடித்தால்,அவர்கள் ஆரோக்கியமும் சீராக இருக்கும் என்பதே அதற்கு காரணம்.
மாறிவரும் உலகம்
காலப்போக்கில் மக்கள் செம்பு குடங்கள் அல்லது செம்பு பாத்திரங்களை பயன்படுத்துவது குறைந்தது.

 அனைத்து வீடுகளிலும் எவர்சில்வர் அல்லது அலுமினிய பாத்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இருந்த போதும் இன்றும் திருமணங்களில் பெண் வீட்டார் தங்கள் பெண்ணுக்கு கொடுக்கும் சீர்வரிசையில் கண்டிப்பாக காசி பானையும் சேர்த்துக் கொடுப்பார்கள்.

 ஏனென்றால் மணமக்கள் அந்த செம்பு பானையில் தண்ணீர் ஊற்றி குடித்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற ஐதீகம் உள்ளது.

காசி பானையின் நன்மைகள் செம்பால் செய்யப்பட்ட காசி பானையில் ஊற்றி வைத்த தண்ணீரை குடிப்பதால் பல நோய்களை தடுக்கவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முடியும்.

 இந்த தண்ணீர் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை உயர்த்தும்.

 எலும்புகளை வலுப்படுத்தும்.

 இதய ஆரோக்கியத்தை சீராக்கும் உடல் எடையை குறைக்க உதவும்.

பாரம்பரியத்தில் ஒளிந்திருக்கும் அறிவியல் 
பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழர்களால் தண்ணீரை ஆரோக்கியமாக பருகுவதற்கு காசி பானையை பயன்படுத்தி வந்தனர்.

 இதன் காரணமாகவே தமிழக பாரம்பரியத்தில் தங்கள் பெண்ணுக்கு கொடுக்கும் சீர் வரிசையில் காசி பானையும் இடம்பெற்று இருப்பதை உறுதி செய்தார்கள்.

 இதில் பாரம்பரியம் மட்டுமில்லாமல் உடல் ஆரோக்கியம் என்ற அறிவியலும் அடங்கியுள்ளது.

 நாமும் இதனைப் பின்பற்றி காசி பானையை வீடுகளில் பயன்படுத்த தொடங்குவோம். 

கருத்துரையிடுக

புதியது பழையவை