புகழ் பெற்றதால் தற்கொலை

உலகப் புகழ்பெற்ற இந்த புகைப்படத்தை எடுத்தவர் கெவின் கார்ட்டர்,தற்கொலை செய்து கொண்டார் ஏன் தெரியுமா..?

கெவின் கார்ட்டர் உலகப் புகழ்பெற்ற புகைப்படக்காறர்.தலை சிறந்த புகைப்படக்காறர்கள் போன்றே இவருக்கும் நல்ல புகைப்படங்களை எடுக்க வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் இருந்தது.

இந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்.கிராமம்,காடு,மலை என்று அவரைக் கொண்டு சென்றது,

1983 இல் இந்த ஆர்வம் அவரை தனது சக புகைப்படக் கலைஞர்கள்,பத்திரிகையாளர்களோடு சூடானுக்கு கொண்டு சென்றது,

அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்தது.

குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள் உண்ண உணவின்றி பருக நீரின்றி பசி தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தார்கள்,

பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளை கமெராவில் பதிவு செய்ய கெவின் தொலைதூர கிராமங்கள்வரை சென்றார்,

இறுதியாக அவர் முயற்சி கைகூடியது.ஒரு நாள்தன் கமெராவை தோளில் தொங்க விட்டுக்கொண்டு உள்ளத்தை உருக்கக்கூடிய படத்துக்கான காட்சியை தேடியலைந்துகொண்டிருக்கும் போது அப்படக்காட்சி தென்பட்டது, 

பசி தாகத்தால் அடிபட்ட நோஞ்சான் நிலையில் உள்ள ஒரு சிறுமி நடக்கக்கூட இயலாத நிலையில் எலும்பும் கூடுமாக தன்னுடைய உடலை தவழ்ந்து இழுத்துக்கொண்டு மெல்ல மெல்ல ஊர்ந்து செல்வதைக் கண்டார்,

அந்தச் சிறுமி ஜக்கிய நாடுகளின் சபையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த உணவு வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி தவழ்ந்து கொண்டிருந்தது. உண்மையிலேயே இதயத்தை பிழியக்கூடியதாக இருந்தது.

தோளில் இருந்து கமெராவை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு இன்னொரு வியப்பும் காத்துக்கொண்டிருந்தது.

ஆம் அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்கு பின்னாலேயே சிறிது தொலைவில் ஒரு பிணம் தின்னிக்கழுகும் சிறுமி மீது பார்வையை நிலை நிறுத்திக்கொண்டிருந்தது,

எப்போது சிறுமியை விட்டு உயிர் பிரியும்,மீதியுள் அந்த தோலையும் அதை சுற்றி இருக்கும் சிறிய சதையையும் எப்போது சாப்பிடலாம் என காத்திருந்தது பிணம் தின்னும் கழுது.

கெவின் கமெரா லென்சை கண்ணுக்கு ஒத்திக்கொண்டார்,சிறுமியையும் கழுகையும் ஒரே பிறேமில் அடக்கிக்கொண்டு "க்ளிக்" செய்தார்,

இப்போது அவரது புகைப்படக் கருவியில் மிகவும் அரிதிலும் அரிதான படமாக இக்காட்சி பதிவாகியது,

இதைவிற்றால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் கமெராவை தோளில் மாட்டிக்கொண்டு தனது வண்டியை ஸ்டார்ட் செய்து பறந்துவிட்டார்,

இந்த அரிதான படத்தை "நியூயோர்க் டைம்ஸ்" பத்திரிகைக்கு விற்றுவிட்டார்,

இந்தப் புகைப்படம் 1993 மார்ச் திங்கள் 26ஆம் நாள் காலை நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியானது,இந்தப் படத்தைப் பார்த்ததும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பத்திரிகை அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர்,

அனைவரும் ஒரே கேள்வியைக் கேட்டனர்,புகைப்படத்தில் உள்ள சிறுமி என்ன ஆனாள்,..?அவள் உயிருடன் இருக்கிறாளா..?அல்லது இறந்து விட்டாளா..?இந்தக் கேள்விக்கான பதில் பத்திரிகையின் தொலைபேசி இயக்குபவரிடமோ புகைப்படத்தை எடுத்த கெவின் கார்ட்டரிடம் இருந்தோ பதில் எதுவும் இல்லை,

1994 மே மாதம் 23 ஆம் திகதி பெரும் கைதட்டல்களோடு கெவின் கார்ட்டர் கொலம்பிய பல்கலைக்கழகத்தின் பிரமாண்டமான அரங்கத்தில் இந்த அரிதான புகைப்படத்திற்கான "புலிச்சர்" விருதைப் பெற்றுக் கொண்டார்,இவ் விருது புகைப்படத்துறையில் நோபல் விருதுக்கு இணையானது,

விருது பெற்ற சிலநாட்களின் பின் கெவின் மன உளைச்சலுக்கு உள்ளானார்.

கெவினுக்கும் அங்கு இருந்த பிணம் தின்னும் கழுகுக்கும் என்ன வித்தியாசம்..? இரண்டுமே ஒரே விதமாகத்தான் செயற்பட்டுள்ளனர்,

குறைந்த பட்சம் புகைப்பட நிபுணர் கெவின் அந்த சிறுமிக்கு ஒரு வாய் தண்ணீராவது கொடுத்து உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்,அல்லது தனது வலுவான கைகளினால் தூக்கிச்சென்று உணவளிக்கும் அமைப்பு அலுவலகத்தின் வாயிலிலாவது சேர்த்து விட்டிருக்கலாம்.

கல்லெறிந்துவீசி அந்தக் கழுகையாவது விரட்டியிருக்கலாம்,ஆனால் இவற்றில் எதையும் செய்யாமல் வெறும் ஒரு படத்தை எடுத்தார்,அவற்றை அதிக விலைக்கு பத்திரிகைகைக்கும் விற்றுவிட்டார் என்று அவர்மீது ஒருவர் குற்றஞ்சாட்டினார்,

இரண்டு மாதங்களிற்குப் பின் கடற்கரை அருகில் கார் ஒன்று நின்றது கெவின் அதில் பிணமாகக் கிடந்தார்,

கெவின் தற்கொலை செய்து கொண்டார்,அவர் அருகில் காவல்துறைக்கு ஒரு கடிதம் கிடைத்தது,அதில் சிலவரிகள் இருந்தன.

முதல்வரி...I am really really sorry,

நாம் எவராக இருந்தாலும் சரி நண்பர்களே நம்மில் மனிதம் இல்லை எனில் நாமும் மிருகத்திற்கு ஒப்பானவர்களே.

கருத்துரையிடுக

புதியது பழையவை