குசும்புதான் உங்களுக்கு....

*நம்மூர் குசும்பே தனி தானுங்க*🤣

ஒரு ரெண்டுநாள் ஆபீஸ் வேலையா கோயம்பத்தூர் போனேங்க ......

அங்க லோகல் பஸ்சுல கண்டக்டர்கிட்ட
*"சார் ஒரு காந்திபுரம் குடுங்க"* ன்னு கேட்டேன்.

*_"எங்க ஊர்லே ஒரே ஒரு காந்திபுரம் தான் இருக்கு, அதையும் உனக்கு குடுத்துட்டா அப்புறம் நாங்க என்ன பண்றது?"_* ன்னு திருப்பி கேட்டார்.

(ஆகா... இன்னைக்கு சனி சடைபோட ஆரம்பிச்சிருச்சு, இன்னும் என்னனென்ன நடக்கப்போகுதோ?)

*"சார் காந்திபுரம் போக ஒரு பயணச்சீட்டு குடுங்க"*

*_"ஓ........ அதுவா அப்படிக்கேளு , இந்தா"_*

(இந்த ஊருக்காரனுக கிட்ட இனி வாயக்குடுத்து வாங்கிகட்டிக்க கூடாது).

போயி ஒரு சீட்ல உட்கார்ந்தேன். நமக்கு அந்த ஊரு புதுசு, பக்கத்துல இருந்தவர்கிட்ட
*"சார் காந்திபுரம் வந்தா சொல்லுங்க"* ன்னு சொன்னேன்.

உடனே அவரு *_"காந்திபுரம், காந்திபுரம்"_* ன்னு நாலுவாட்டி சத்தமா சொன்னாரு. 

அப்புறம் என்னைய பாத்து
*_"சார், நான் கூப்பிட்டு பாத்தேன்.. காந்திபுரம் வரமாட்டேங்குது.. நீங்க வேணா ஒரு வாட்டி கூப்பிட்டு பாருங்க"_* ன்னு சொன்னாரு.

(அடப்பாவிகளா.... வீட்டுலே யோசிச்சிட்டு வருவானுகளோ)

*"இல்லை சார் காந்திபுரம் ஸ்டாப் வந்தா சொல்லுங்க. நான் அங்க இறங்கணும்"* என்றேன்... விளக்கமாக.

*_"உங்க போன் நம்பர் குடுங்க"_*

*"ஏன் சார்?"*

*_"இல்லை நான் அந்த ஸ்டாப்புக்கு முன்னாடியே இறங்கிடுவேன். நாளைக்கு அந்தப்பக்கம் போவேன். அப்ப காந்திபுரம் வந்த உடனே உங்களுக்கு போன் பண்ணத்தான்"_*

நல்ல வருவீங்க...

கருத்துரையிடுக

புதியது பழையவை