பெண்களுக்கு பல்வேறு வகையிலும் நன்மைகள் தரும் பொட்டுக்கடலை
இதில் புரதம், கார்போஹைட்ரேட், கால்சியம், இரும்புச்சத்து, என உடலுக்கு தேவையான பல சத்துக்கள் உள்ளன.
இதை தினமும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டால் தலை முதல் கால் வரை பல நன்மைகள் இயற்கையாகவே கிடைக்கும்.
முடிக்கு நன்மை தரும் பாெட்டு கடலை
=> உடைத்த கடலையில் மெலனின் மற்றும் ரெரோட்டின் எனும் இரண்டு முக்கியமான புரதங்கள் நிரம்பியுள்ளன.
=>இதை தினமும் சாப்பிடும்போது தலைமுடியின் வேர்களை பலப்படுத்தும்.
=>முடி உதிர்வு, இளம் வயதினருக்கு நரைமுடி போன்ற பிரச்சனைகள் குணமாக்கும்.
=>முடி வளர்ச்சிக்கு இது உதவும்.
இதயத்திற்கு நண்பன்
=>உடைத்த கடலையின் கொழுப்புச்சத்து குறைவாக உள்ளது.
=>இதைத்தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் இதயம் நலம் மேம்படும்.
=> ஆயுளும் அதிகரிக்கும்.
கர்ப்பிணிகளுக்கு உகந்தது
=> உடைத்த கடலையை கருவுற்றிருக்கும் பெண்கள் சரியான விகிதத்தில் சாப்பிட்டால் அவர்களுக்கு மட்டும் இன்றி வயிற்றில் வளரும் கருவிற்கும் பல நன்மைகள் கிடைக்கும்.
=> மகப்பேறு காலத்தில் ஏற்படும் வலி மற்றும் உடல் சோர்வை நீக்கும் தன்மை இதற்கு உண்டு.
உடலை வலுவாக்கும்
=>புரதம் ,வைட்டமின்கள் அதிக அளவு உள்ளதால் எலும்புகள், நரம்புகள், தசைகள், வலுப்பெற்று உடலுக்கு அதிக ஆற்றலைத் தரும்.
=> நீண்ட நேரம் கடின உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் உடைத்த கடலையை சிறிது சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த சக்தியை தரும்.
=> நரம்பு சம்பந்தமான பாதிப்பிலிருந்து காக்கும்.
=> எனவே உடைத்த கடலையை தினமும் 5 கிராம் அளவு சாப்பிடலாம்.
=> இதை தனியாக சாப்பிடுவதற்கு பிடிக்காதவர்கள் வெல்லத்துடன் கலந்து உண்டால் நன்மைகள் அதிகரிக்கும்.