இவளாேடு இப்படியும் இருக்கலாம்

இவளாேடு இப்படியும் இருக்கலாம்


@முதலாவதாக மனைவியையும் மனைவி வீட்டாரையும் மரியாதை கொடுத்து மதிக்க பழகுங்கள்.

@மனைவியுடன் சண்டை வரும் போது மனைவி வீட்டாரை இழுக்காதீர்கள்.

@மனைவியின் உடல் குறைகளை குத்திக் காட்டிப் பேசாதீர்கள். 

@ஒரு போதும் தரக்குறைவான வார்த்தைகளைப் பாவிக்காதீர்கள்.

@ வெளியே போகும் போது சிடு மூஞ்சியாக இல்லாமல் இயல்பாக கூட்டிப் போங்கள்.
@ பெற்றோரிடம் 
மனைவியைப் பற்றிப் 
பெருமையாகக் கூறுங்கள்.

@வெளியே இருக்கும் போது தொலைபேசியில் பேசி உனக்கு ஏதாவது வேண்டுமா...
 சாப்பிட்டியா... என அக்கரையுடன் விசாரியுங்கள். 

@மனைவி  ஆசைப்படுவதை
உணர்ந்து முடியுமான வரை 
வாங்கிக் கொடுங்கள்.
@அடிக்கடி வெளியே கூட்டிச் செல்லுங்கள். 

@மனைவியின் சமையலை குறை கூறாமல் பக்குவமாக புரிய வையுங்கள்.

@முடியும் பொழுது நீங்க சமையல்  செய்து மனைவியை அசத்துங்கள். 

@அடிக்கடி அன்பாக தோளில் 
தடவி பேசுங்கள்.

@முடியும் பொழுதெல்லாம் சிறு சிறு தொகை பணம் கொடுத்து வையுங்கள்.அது பிற்காலத்தில் 
உதவெல்லாம். 

@அடிக்கடி அவள் பிறந்த வீட்டிற்கு கூட்டிச் செல்லுங்கள்.

@மனைவி உடல்நிலை சரியில்லை என்றால் நீங்கள் விடுமுறை எடுத்து அவளைப் அன்புடன்  பார்த்துக் கொள்ளுங்கள். 

@அவளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுங்கள்.

@வீட்டில் அவள் எடுக்கும் முடிவுகளை மறுக்காதீர்கள்... 
தவறாயின் புரிய வையுங்கள்.

@அடிக்கடி அவளின் நல்ல செயல்களைப் பாராட்டுங்கள்.

@நீ எனக்கு கிடைத்தது என் அதிர்ஸ்டம் என்று கூறுங்கள்.

@உங்கள் வெளி விடயங்களை இரவில் மனைவியுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

@அவளின் நீண்ட கால விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வையுங்கள்.

@மனைவியாக இருந்தாலும் ஒரு பெண்ணிற்கான மரியாதையை கொடுங்கள்.

@அவளிற்கு பிடிக்காத விடயங்களை தவிருங்கள்.
முக்கியமாக திடீர் என நண்பர்களுடன் வந்து நிக்காதீர்கள்.



கருத்துரையிடுக

புதியது பழையவை