வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும்.
சிலர்தான் வெற்றி பெறுவார்கள். சிலரோ தயக்கம் காரணமாக முயற்சி செய்யாமலே வெற்றியை தவறவிடுவார்கள்.
ஏன் வருகிறது தயக்கம்?
✓மற்றவர்களைப் போல நாம் இல்லை என தோற்றத்தையும்,திறமையையும் வைத்து பலருக்கும் தாழ்வு மனப்பான்மை ஏற்படும்.
✓யார் முன்னிலையிலோ, சங்கடப்படுத்தும் பேச்சுகளுக்கோ, உள்ளாகி இருந்தால் அது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
✓இவ்வாறான தருணங்களில் தயக்கம் பயமாக மாறிவிடும்.
தயக்கத்தை தவிர்க்க
✓எந்த சூழ்நிலை உங்களுக்கு தயக்கத்தையும் பயத்தையும் தருகிறதோ அதிலிருந்து விலகி போகாதீர்கள், முடிந்தளவு எதிர்கொண்டு வரும் பிரச்சனையை சமாளிக்க முன் வாருங்கள்.
✓மேடையில் ஏறி பேசத் தயக்கமா? கண்ணாடி முன் நின்று தொடர்ந்து பயிற்சி எடுங்கள்.
✓ஆங்கிலம் பேசுவதில் தயக்கமா? அதற்கான தீர்வை யோசிக்க எளிய பயிற்சியினை பின்பற்றுங்கள்.
✓பலருக்கு தங்களது வாசிப்பிடத்திலோ? வேலை செய்யும் சூழ்நிலையோ? இது போன்ற தயக்கத்தையும்,தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும் நபர்கள் இருப்பார்கள்.
✓அவர்களை எதிர்த்து நிற்க முடியாத சூழல் இருந்தால், அந்த இடத்தை விட்டு விலகுவதோ அல்லது இருப்பிடத்தை மாற்றுவதோ நல்லது.
மேலே சொன்ன விஷயங்கள் எதுவும் கைகூடவில்லை என்றால் தயங்காமல் மருத்துவர்களையோ அல்லது இந்த பிரச்சனைக்கு சரியா என்ன தீர்வு பிடிக்கும் நபரையோ சந்தித்து உரையாடுங்கள்.
இது தயக்கம் நீக்கும் வழியாக உங்களுக்கு அமையும்.
தயக்கம் தவிர்ப்போம்
தலை நிமிர்வோம்
Super
பதிலளிநீக்கு