ப .......வில் குறையுமா பருமன்...?

பருப்பு - வில் குறையுமா பருமன்


உடற்பயிற்சி செய்யாததாலும் ,அதிக அளவில் துரித உணவுகள் உண்பதாலும், வயிறு, கைகள், கால்கள் போன்ற பகுதிகளில் கொழுப்பு சேர்ந்து உடல் எடை அதிகரிக்கிறது.

சிலர் மருந்துகளின் மூலம் அதிரடியாக எடை குறைக்கின்றனர்.

 இது தீங்கு விளைவிக்கக் கூடியதாகும்.

 உணவு, தூக்கம் போன்றவற்றில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்துதல் போன்றவற்றால் படிப்படியாக எடை குறைப்பதே ஆரோக்கியத்துக்கு நல்லது.

பருப்பு வகைகள் எடை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.

பருப்புகளில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் தேவையற்ற கொழுப்புகளை கரைக்கின்றன.

பருப்பு வகைகள் உடல் எடையை அதிகரிக்கும் என்ற கருத்து பலரிடம் உள்ளது.ஆனால் சமீபத்தில் நடைபெற்ற ஆய்வுகளில் தினமும் பருப்பு வகைகள் என்பவர்களின் உடல் எடையில் பெரியதாக மாற்றம் ஏற்படுவதில்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதில் புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள், போன்றவை எடை குறைப்பிற்கு அவசியமானவை.
பருப்பு வகைகள் இதயம் சார்ந்த நோய்கள், நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கின்றது.
பசி உண்டாகாமல் தடுப்பதில் இவை முக்கிய பங்காற்றுகின்றனர்.

பாதாம்
✓பாதாமில் புரதச்சத்து, ஆன்டி ஆக்சிடெண்டுகள் அதிக அளவில் உள்ளன.

✓கெட்ட கொழுப்பை அதிகரிக்காமல் தடுக்கின்றன.

✓இதன் மூலம் எடை சீரான அளவில் இருக்கும்.

✓ அமினோ அமிலங்கள் இதயத்திற்கு நன்மையை தருகின்றன.

✓தினமும் நான்கு அல்லது ஐந்து பாதாம் சாப்பிடுவது போதுமானது.

அக்ரூட்
✓அக்ரூட் எனப்படும் வால்நட் உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பை வெளியேற்றுகிறது.

✓ஒமேகா என்னும் சத்து அதிக அளவில் இதில் உள்ளது.

பிஸ்தா
✓குறைந்த அளவிலான புரதச்சத்து இதிலிருந்தாலும் அதிக தசை நார்களின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

✓தேவையற்ற கொழுப்புகளை கரைக்கும் தன்மை கொண்டது.

முந்திரி
✓மக்னீசியம் மற்றும் புரதம் இதில் உள்ளது.

✓வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

✓குறைந்த அளவில் மட்டுமே இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு பருப்பு வகைகள் நம் உடலுக்கு ஊட்டத்தையும் எடைக் குறைப்பையும் தருகின்றன.

பருப்பு உண்போம்
பருமன் குறைப்போம்

கருத்துரையிடுக

புதியது பழையவை