அந்த வகையில் பாதாம், பிஸ்தா, உலர்த்த திராட்சை, பேரிச்சம்பழம், அத்தி ஆகியவற்றில் உடலுக்கு நன்மை தரும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள்.
பாதாமை பற்றி இங்கு பார்க்கலாம்.
பாதாமை ஊற வைத்து அதன் மேல் தோலை நீக்கி சாப்பிடுவது சிறந்தது.
ஒரு கைப்பிடி அளவு பாதாமை முதல் நாள் இரவு ஊற வைத்து, அடுத்த நாள் காலையில் எழுந்தவுடன் காலை உணவுக்கு முன்பாக சாப்பிடலாம்.
இவ்வாறு தினமும் சாப்பிட்டு வந்தால் புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், மற்றும் ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களை பெறலாம்.
தொடர்ந்து பாதாமை சாப்பிட்டு வருவதன் மூலம் சுவாசக் கோளாறு, இதய நோய், நீரழிவு நோய், சருமப் பிரச்சனை, முடி உதிர்வு, ரத்தசோகை, போன்ற நோய்களை தடுக்கலாம்.
தினமும் 6 முதல் 7 ஊறவைத்த பாதாம் பருப்புகளை சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.
உடல் எடையை குறைப்பதற்கு முயற்சிப்பவர்கள் தினமும் 5 பாதாம் பருப்புகளை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பு கரையும்.
ஊறவைத்த பாதாமில் உள்ள சத்துக்கள் ரத்தத்தில் ஆல்ஃபா டேகாேபெராலை அதிகரித்து, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகின்றன.
ரத்தத்தில் வெள்ளை மற்றும் சிவப்பு அணுக்களைப் பெருக்கும் சக்தி கொண்டது பாதாம்.
இதில் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளன.
ரிபோஃபிளேவின், எல் கார்னிடைன் போன்றவை மூளையின் செயல்திறனை மேம்படுத்தி புத்திக் கூர்மையை அதிகரிப்பதற்கு உதவுகின்றன.
நரம்பு மண்டலத்தின் சீரான இயக்கத்துக்கு பாதாம் பெரிதும் உதவுகிறது.
வயது முதிர்ச்சியால் வரக்கூடிய, ஞாபகம் மறதி நோயை தடுக்கும்.
பாதாம் எண்ணெயைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து வந்தால், உடலில் ரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து சருமம் ஆரோக்கியமாகவும், பொலிவுடன் இருக்கும்.
தினமும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு முகத்தில் பாதாம் எண்ணெய் தடவி மென்மையாக மசாஜ் செய்து வந்தால் பொலிவு அதிகரிக்கும்.
மாதவிடாய் நின்ற பெண்கள் தினமும் பாதாம் பருப்பு சாப்பிட்டு வந்தால், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை போக்க முடியும்.