உங்களுக்கு கொழுப்பா...

கொழுப்பை குறைக்கலாம் வாங்க
ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து படியே இருப்பது, உடற்பயிற்சி செய்யாதது, துரித உணவுகள் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது, போன்ற காரணங்களால் தேவையற்ற கொழுப்பு உடலில் சேர்கிறது.


உடற்பயிற்சி மேற்கொள்வது, உணவு கட்டுப்பாடு போன்றவற்றால் கொழுப்பு தசைகளை குறைக்க முடியும்.

=>உணவில் பூண்டு , வெங்காயம் போன்றவற்றை அதிகமாக சேர்த்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும்.

=>அவகேடோ பழத்தில் கெட்ட கொழுப்பை எரிக்கும் மூலக்கூறுகள் உள்ளன. இதில் சாலட்  தயார் செய்து சாப்பிட்டு வரலாம்.

=>நார்ச்சத்து உள்ள உணவுகளை தினமும் சாப்பிடுவதால் தேவையற்ற கொழுப்புகளை கரைக்கலாம்.
=>சிவப்பு அரிசி, கொண்டைக்கடலை, கோதுமை, சோளம், கம்பு ,கேழ்வரகு, முழு தானியங்கள், பச்சை பட்டாணி , பழங்கள் போன்றவற்றில் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது.

=>பப்பாளி காயை சமைத்து சாப்பிட்டு வந்தால் தசைகள் உள்ள கொழுப்பு குறைந்து உடல் குறையும்.

=>காபி, அட்ரினலின் சுரப்பியைத் தூண்டும் ஆற்றல் கொண்டது.

=>தினமும் குறைந்தது 20 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொண்டால் உடலில் சேரும் அனைத்து அதிகப்படியான கொழுப்புகளை குறைக்கலாம்.

=>உடற்பயிற்சி தொடங்குவதற்கு முன்பு காப்பியை பருகினால் அது எர்காேஜெனிக் போல செயல்பட்டு தசைகளில் படிந்துள்ள கொழுப்பை ஆற்றலாக மாற்றியது.

->தினமும் காலையில் எழுந்தவுடன், காலை உணவுக்கு முன்பு, சூடான நீரில் இலவங்கப்பட்டை தூளை கலந்து குடிக்கலாம். இதன் மூலம் அதிகப்படியான கொழுப்பை குறைக்க முடியும்.

=>உடல் எடையை குறைப்பதில் சுரைக்காய் பெறும் பங்கு வகிக்கிறது. வாரத்திற்கு மூன்று நாட்கள் சுரைக்காயை சமைத்து சாப்பிட்டால் வயிற்று பகுதியில் உள்ள கொழுப்பு குறையும்.

=>ஒரு கப் பாலில் 1/4 ஸ்பூன் பெருஞ்சீரகத்தை சேர்த்து நன்றாக காய்ச்சி குடித்து வந்தால் தேவையற்ற கொழுப்புகள் கரையும்.

=>கொள்ளு பயிரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் தசைகளை உறுதியாக்கி கொழுப்பை குறைக்கலாம்.

=>வாழைத்தண்டு மற்றும் அருகம்புல் போன்றவற்றை சாராக்கி பருகலாம்.

=>தினமும் காலையில் அரை மணி நேரம் நடைபயிற்சி மேற்கொண்டால், தசைகளில் படிந்து இருக்கும் கொழுப்பு குறையும்.உடல் எடை குறைந்து புத்துணர்வு கிடைக்கும்

1 கருத்துகள்

புதியது பழையவை