ஓடும் நதியில் குளிப்பதால் மனரீதியாக மட்டுமில்லாமல் உடல் ரீதியாகவும் அதிக நன்மைகளை தருகிறது.
நுரையீரல் செயல்பாட்டை சீராக்குகிறது
நதிநீரில் மூழ்கிக் குளிக்கும் போது நம்மை அறியாமலே மூச்சை நன்றாக இழுத்து வெளியிடுவோம் .
இது சிறந்த மூச்சு பயிற்சியாக விளங்குகிறது .
இதனால் நுரையீரலில் செயல்பாடு சீராக நடைபெற உதவுகிறது.
மன அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது
குளிர்ச்சியான நதிநீர் நீராடும் பொழுது பீட்டா - எண்டோர்பின்ஸ் மற்றும் நார் அட்ரிரெனலின் போன்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன.
இது மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி அமைதியான மனநிலையை உருவாக்குகின்றன.
தொற்று நோய்களைத் தடுக்கிறது
நதிநீரில் மூழ்கி குளிக்கும் போது உடலில் உள்ள நிணநீர் நாளங்கள் சுருங்குகிறது.
இது நிணநீர் மண்டலங்களை தூண்டி உடல் முழுவதும் திரவங்களைக் கொண்டு செல்கிறது.
இதனால் நோய் எதிர்ப்பு தன்மை அதிகரித்து தொற்று நோய்கள் நம்மை தாக்காதவாறு பாதுகாக்கிறது.
வலி மற்றும் வீக்கத்தை குணப்படுத்துகிறது
ஓடும் நதிகள் ஒரே இடத்தில் இல்லாமல் நீர் ஓடிக்கொண்டே இருக்கும்,
இவ்வாறு ஓடி வரும் நீரில் பற்பல மூலிகைச் செடி கொடிகளும் அடித்துக் கொண்டும்.
அவற்றின் மூலிகை குணங்கள் நீரோடு கலக்கின்றது.
அந்த நீரில் குளிக்கும் போது உடலில் உள்ள வீக்கங்கள் குறையும், வலி நிவாரணம் கிடைக்கும்.
பிற நன்மைகள்
கோபம் எரிச்சல் மன உளைச்சல் போன்ற பிரச்சனைகளும் நதியில் குளிப்பதால் மறைந்து போகும்.
நதிகளில் குளிர்ந்த நீரில் குளிக்கும் பொழுது ரத்த ஓட்டம் சீராகும்.
இதயத்தின் செயல்பாடு அதிகரிக்கும்.
உடலும் மனமும் சுறுசுறுப்பாக இயங்கும்.
நரம்பு மண்டலம் புத்துணர்வோடு செயல்படும்.
இதன் மூலம் முகம் பொலிவடையும்.
நதிகளில் நீராடும் போது எதிர்மறை எண்ணங்கள் நீங்கி புத்துணர்வு ஏற்படும்.