காெசு சிலரை மட்டும் கடிப்பது ஏன்...?

கொசுக்கள் நம்மில் ஒரு சிலரை மட்டுமே கடிக்கும் - அது ஏன்?

கொசுக்கள் உங்களை கடித்தால், அது நிச்சயம் பெண் கொசுவாகத்தான் இருக்கமுடியும். ஏனென்றால் ஆண் கொசுகள் கடிக்காது.

உண்மையில், புள்ளிவிவரங்களின்படி, கொசுதான் மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் உலகின் மிகக் கொடிய உயிரினம்.

2018ல் மட்டும் சுமார் 7 லட்சத்து 25 ஆயிரம் இறப்புகளுக்கு இந்த கொசுக்கள் காரணமாக இருந்தன.

அதே ஆண்டில், மனிதர்களின் இறப்புக்கு காரணமான உயிரினங்கள் பட்டியலில் மனிதர்கள் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். அவர்கள் 4 லட்சத்து 37 ஆயிரம் மனிதர்களின் இறப்புக்கு காரணமாகியுள்ளனர்.

நோய்ப் பரப்பிகளை, குறிப்பாக இந்த பட்டியலில் முக்கியமாகத் தனித்து நிற்கும் கொசுக்களை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு வலு சேர்க்கவே இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது.

கொசுக்கள் எல்லோரையும் ஒன்றுபோலவே கடிப்பதில்லை.
 சிலரை அதிகமாக கடிக்கும் கொசுக்கள், வேறு சிலரை கடிப்பதில்லை. இதற்குக் காரணம் என்ன?

மற்ற பகுதிகளை விட மனித தோலை குத்தி ரத்தம் உறுஞ்சுவது கொசுக்களுக்கு மிகவும் எளிது.

ஆண், பெண் கொசுக்கள் மற்ற விலங்குகளை கடிக்காமல் வாழ முடியும்.

ஆனால் இனப்பெருக்க சுழற்சியை முடிக்க, பெண் கொசுவுக்கு ரத்தம் தேவைப்படுகிறது.

ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, கரியமில வாயு (CO₂) கொசுக்களை ஈர்க்கும் வாயுவாக அடையாளம் காணப்பட்டது. முட்டைகளை உருவாக்குவதற்குத் தேவையான ஊட்டச்சத்துகளைப் பெறுவதற்காக பெண் கொசுக்களுக்கு ரத்தம் தேவைப்படுகிறது.

பெண் கொசுக்கள், முட்டைகளை உற்பத்தி செய்யும்போது மட்டுமே ரத்தத்தை உறிஞ்சும்.

பிற உடலியல் மற்றும் வேதியியல் சமிக்ஞைகள் உள்ளன.

குறிப்பாக, வெப்பம், ஈரப்பதம், அதற்கு தென்படும் விஷயங்கள் மற்றும், மிக முக்கியமாக, தோலில் இருந்து வெளிப்படும் ஒருவித வாடை ஆகியவையே கொசுக்கள் யாரை அதிகம் கடிப்பது என்பதைத் தீர்மானிக்கின்றன.

நம் உடலில் இருந்து வரும் எந்த வாடை, கொசுக்களை அதிகம் ஈர்க்கிறது என்பது இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்றாலும், பல ஆய்வுகள் இண்டோல், நோனானோல், ஆக்டெனோல் மற்றும் லாக்டிக் அமிலம் போன்றவையே இப்படி ஈர்ப்பதாக சுட்டிகாட்டுகின்றன.

உங்கள் ஆடையின் நிறமும் கொசுகள் கடிப்பதை தீர்மானிக்கிறது.

வாசனையை மாற்றும் நுண்ணுயிரிகள்
ஒரு நுண்ணுயிரி கொசுக்களையும், மனித உடலையும் பல்வேறு வகையிலும் பாதிக்கின்றது.

2 கருத்துகள்

புதியது பழையவை