நம் உடலில் 99% கால்சியம் ஆனது கடின திசுக்களாக பற்கள் மற்றும் எலும்புகள் வடிவில் இருக்கும்.
கால்சியம் குறைபாட்டை வெளிப்படுத்தும் அறிகுறிகள்
குழப்பம், நினைவாற்றல் இழப்பு, தசை பிடிப்பு, கை, பாதம் மற்றும் முகத்தில் உணர்ச்சி இல்லாமல் போவது, மன அழுத்தம், அடிக்கடி நகத்தில் பாதிப்பு ஏற்படுதல், பற்கூச்சம், எலும்புகளில் வலி மற்றும் எலும்பு தேய்மானம் போன்றவை.
கால்சியம் குறைபாடு ஏற்பட காரணங்கள்
சத்துள்ள சரிவிகித உணவு உண்ணாமை, செரிமான கோளாறுகளில் உணவில் உள்ள சத்துக்கள் உடலில் சேராமல் போவது, உயர் மற்றும் குறைந்த அளவு மெக்னீசியம் மற்றும் பாஸ்பேட் சத்து இருத்தல்,சிறுநீரக செயலிழப்பு, கணைய ஒவ்வாமை, வைட்டமின் டி அளவு குறைதல் மற்றும் சில வகை மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவு போன்ற காரணங்களால் உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படலாம்.
கால்சியம் சத்து நிறைந்த உணவுகள்
✓முதலாவது பால் மற்றும் பால் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
✓தினசரி ஐந்து பாதாம் பருப்புகளை சாப்பிட்டு வந்தால் உடலில் கால்சியம் சத்து அதிகரிக்கும்.
✓பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
✓மீன், ஆட்டு எலும்பு மஜ்ஜைகள், நாட்டுக்கோழி போன்ற உணவுகளை வாரம் ஒரு முறை சாப்பிடலாம்.
✓பொன்னாங்கண்ணிக் கீரை, வெந்தயக்கீரை, தண்டுக்கீரை மற்றும் மணத்தக்காளி கீரை போன்ற கீரை வகைகளை உண்ணலாம்.
✓அத்தி, கொய்யா, ஆரஞ்சு, கிவி, பெர்ரி, அன்னாசி,லிச்சி, பப்பாளி, ஸ்ட்ராபெரி, முந்திரி போன்ற பல வகைகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.